சர்ச்சைக்குப் பின் முதல் போட்டி! டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த அஷ்வின் #KKRvKXIP | IPL 2019: KXIP won the toss and elected to bowl against KKR

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:55 (27/03/2019)

சர்ச்சைக்குப் பின் முதல் போட்டி! டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த அஷ்வின் #KKRvKXIP

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

அஷ்வின்

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நம்பிக்கையில் களம்காண்கின்றன. 

கொல்கத்தா பிளேயிங் லெவன்


கொல்கத்தா அணி, தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது. அதேபோல், பஞ்சாப் அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியிருந்தது. குறிப்பாக அந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது. அந்த சர்ச்சைக்குப் பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் பங்கேற்கிறது. 

பஞ்சாப் பிளேயிங் லெவன்

கொல்கத்தா அணி, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியில் 3 மாற்றங்களுடன் களமிறங்குகிறது. மில்லர், வில்ஜியோன் மற்றும் தமிழகத்தின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இன்றைய பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கின்றனர்.