``அந்த ஃபீல்டர் பெயர்கூட தெரியாது; அவருக்கு எனது நன்றிகள்!” - ரஸல் அதகளம் | Thanks to that guy was outside the ring -Andre Russell

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:11:40 (28/03/2019)

``அந்த ஃபீல்டர் பெயர்கூட தெரியாது; அவருக்கு எனது நன்றிகள்!” - ரஸல் அதகளம்

ரஸல்

Photo Credits: iplt20.com

ஐபிஎல் கிரிக்கெட்டில், இந்த வருடம் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார் அஷ்வின். ‘மன்கடட்’அவுட் - நோபால் என வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். ரூல்ஸ் படிதான் நடத்துக்கிட்டேன் என சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார் அஷ்வின்.  ஓர் அணியின் கேப்டன் என்ற முறையில் அதுதான் சரியானது. ஒரு பந்துவீச்சாளராக, அணித் தலைவராக அவருக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. இந்த ஐபிஎல்-லில் எதிர்பாராமல் நடப்பது எல்லாம் அஷ்வின் பக்கமே திரும்புகிறது. ராஜஸ்தான் ராய்ஸ், வெற்றியை நோக்கிப் பயணித்துகொண்டிருந்தபோதுதான் ஜோஸ் பட்லரை மன்கடட் முறையில் அவுட்டாக்கினார் அஷ்வின். அதன் பின்னர் வந்த ராஜஸ்தான் வீரர்கள், வந்த வேகத்தில் நடையைக் கட்ட பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றது.

அஷ்வின்

Photo Credits: iplt20.com

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மிரட்டிக்கொண்டிருந்த ரானாவை கஷ்டப்பட்டு வெளியேற்றினர் பஞ்சாப் வீரர்கள். பின்னர் வந்த ரஸலை, பஞ்சாப் அணியின் ஷமி வீசிய 17-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டம்ப்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஆனால், களநடுவர் நோபால் என்று அறிவித்தார். ஷமி உட்பட அனைவரும் அப்செட். விதிமுறைப்படி இன்னர் சர்க்கிள் எனப்படும் 30 யார்டு சர்க்கிளில், குறைந்தபட்சம் 4 ஃபீல்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 30 யார்டு சர்க்கிளில் 3 ஃபீல்டர்கள் மட்டுமே இருந்தால் நோபால் அறிவிக்கப்பட்டது. இந்த நோபால்தான், நேற்று பஞ்சாபின் வெற்றியைப் பறித்தது என்றுகூட கூறலாம். இந்த விக்கெட்டின்போது ரஸல் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த ஃப்ரி ஹிட்டுலும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அப்போதும் 4 (6) ரன்களைத்
தான் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில், அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்களைக் குவித்தது. ரஸல் 17 பந்துகளில் 48 ரன்களை விளாசியிருந்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களே எடுக்க முடிந்தது. ரஸலின் ஆட்டமே கே.கே.ஆர் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. ‘அஷ்வின் இதுதான் கர்மா என்பது’ என்று ட்விட்டர்
வாசிகள் கலாய்த்துத் தள்ளினர்.

ரஸல்

Photo Credits: iplt20.com

ஆட்டநாயகன் விருதுபெற்ற ரஸல் பேசுகையில், ``இந்த கார்களும், விருதுகளை அடுக்குவதற்காக நான் பெரிய கேரேஜை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே நின்ற ஃபீல்டருக்கு நன்றி. அவர் புதிய நபராக இருக்கிறார். அவரது பெயர் எனக்குத் தெரியவில்லை. 'நான், ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனது இன்றைய இரவை நான் தொலைத்து விட்டேன்' என்பது போல உணர்ந்தேன். ஆனால், நடுவர் நோபால் அறிவித்ததும் அனைவரும் சந்தேகத்துடன் இருந்தனர். ஷமி எல்லை தாண்டிவிட்டாரோ என முதலில் நினைத்தேன். பிறகுதான், ஒரு வீரர் யார்டுக்கு வெளியே இருப்பதை உணர்ந்தேன். இதுபோன்ற வாய்ப்பு உங்களுக்கு எல்லா நாளும் கிடைக்காது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதன்படி சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சியே.

கிறிஸ் கெய்ல்

Photo Credits: iplt20.com

கெய்ல் எனக்கு சகோதரர் போன்றவர். அவர், மிகப்பெரிய ஜாம்பவான். அவரைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்கெனவே வகுத்திருந்தோம். நான், அதிரடியாக இந்தப்போட்டியில் விளையாடி இருக்கலாம். ஆனால், எப்போதும் கெய்ல் தான் பெரிய ஹிட்டர்" எனப் பேசினார்.