``ரஸலுக்குக் கிடைத்த லைஃப் வெற்றியை எளிதாக்கியது!” - ஆரஞ்ச் கேப் `ராணா’ ஓபன் டாக் | Russell got a lifeline we Get Extra Runs - Rana

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (28/03/2019)

கடைசி தொடர்பு:14:29 (28/03/2019)

``ரஸலுக்குக் கிடைத்த லைஃப் வெற்றியை எளிதாக்கியது!” - ஆரஞ்ச் கேப் `ராணா’ ஓபன் டாக்

ராணா


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த சீசனைப் போன்ற ஒரு வலுவான பேட்டிங் லைனை கொண்டு களமிறங்கியுள்ளது. சுனில் நரைன், கிறிஸ் லீன், ராபின் உத்தப்பா, நித்திஷ் ராணா, ஆண்ட்ரூ ரஸல், தினேஷ் கார்த்திக் எனப் பெரிய பேட்டிங் பட்டாளத்துடன் காணப்படுகிறது. முதல் போட்டியிலிருந்தே இவர்கள் அதிரடியை ஆரம்பித்து விட்டனர். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 181 என்ற டோட்டலை சக்ஸஸாக சேஸ் செய்தது. அந்தப்போட்டியில் ராணா (68), ரஸல் (49), ராபின் உத்தப்பா (35) என அதிரடி காட்டினர்.

 

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சுனில் நரைன், கிறிஸ் லீன் ஆரம்பத்திலே அதிரடி காட்டினர். 3வது ஓவரில் ஸ்கோர் 34 வந்துவிட்டது. இவர்கள் இருவரும் விரைவிலே வெளியேறினாலும் அதன் பின்னர் வந்த நித்திஷ் ராணா - ராபின் உத்தப்பா அந்த ரன்ரேட்டை அப்படியே மெய்ன்டன் செய்தனர். இறுதியில் ரஸல் தன் பங்குக்கு ஒரு காட்டுக் காட்ட கே.கே.ஆர். 218 ரன்களை குவித்தது. ராணா இந்தப் போட்டியிலும் அரைசதம் விளாசினார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களே எடுக்க முடிந்தது.

ரஸல்


இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ராணா தற்போது 131 ரன்களுடன் ஆரஞ்ச் தொப்பியைத் தன்வசம் வைத்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள ராணா, ``கடந்த சில ஐபிஎல் தொடர்களில் ஆரம்பத்தில் நான் சிறப்பாகத்தான் தொடங்கினேன். ஆனால் அந்தத் தொடர் முழுவதும் என்னால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. ஆனால், இந்த முறை அவ்வாறு இருக்காது. தற்போது இருக்கும் ஃபார்மிலே இந்தப் போட்டி தொடர் முழுவதும் விளையாட விரும்புகிறேன் அதற்காகக் கடினமாக உழைக்கிறேன். குறிப்பிட்ட எந்தப் பந்துவீச்சாளரையும் குறிவைத்து நான் திட்டமிடுவதில்லை. நான் என்னுடைய இன்னிங்ஸை கட்டமைக்கவே விரும்புகிறேன். என்னுடைய கேம் பிளான் ரொம்ப சிம்பிள். இந்தக் கட்டத்தில் அடிக்க வேண்டும் என நினைத்துவிட்டால் அதைச் செயல்படுத்த முயற்சி செய்வேன். நேற்றைய போட்டியில் 180 -200 குவித்திருந்தால் நாங்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடி இருப்போம். 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சேஸிங் செய்யக்கூடிய ரன்தான். நாங்கள் 200 க்கும் அதிமான ரன்கள் என்கிற போது அது எங்களுக்குச் சாதகமாகிவிட்டது. ரஸல் கிடைத்த நோபால் எங்களுக்கு மேலும் 20-ல் இருந்து 25 ரன்களை சேர்த்துக் கொடுத்துவிட்டது. அது எங்கள் வெற்றியைச் சற்று எளிதாக்கியது” எனப் பேசினார்