இன்றாவது சாதிப்பாரா கோலி? - எதிர்பார்ப்பில் ஆர்.சி.பி ரசிகர்கள் #RCBvMI | kohli need 46 runs to get 5 thousand runs in IPL

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (28/03/2019)

கடைசி தொடர்பு:18:12 (28/03/2019)

இன்றாவது சாதிப்பாரா கோலி? - எதிர்பார்ப்பில் ஆர்.சி.பி ரசிகர்கள் #RCBvMI

மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 46 ரன்கள் எடுத்தால், ஐ.பி.எல் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த 2-வது வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

ரெய்னா

ஐ.பி.எல் போட்டி களைகட்டத் தொடங்கியுள்ளன. இந்த ஐ.பி.எல் லீக் தொடங்குவதற்கு முன்னதாகவே 5,000 ரன்களை கடக்கும் முதல் வீரர்கள் பட்டியலில் கோலி, ரெய்னாவின் பெயர்கள் இடம்பிடித்திருந்தன. கோலியா? ரெய்னாவா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் 5,000 ரன்களைக் கடக்க ரெய்னாவுக்கு 16 ரன்களும், கோலிக்கு 52 ரன்களும் தேவைப்பட்டன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இருவருக்குமே வாய்ப்புகள் இருந்தன.

கோலி

ஆனால், இந்த வாய்ப்பை ரெய்னா பயன்படுத்திக்கொண்டார். சி.எஸ்.கே வெர்ஸஸ் ஆர்.சி.பி  ஆட்டத்தின்போது கோலிக்குத்தான் முதல் வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார் கோலி. 6 ரன்னில், ஹர்பஜன் சிங் பௌலிங்கில் விக்கெட்டை இழந்தார்.

கோலி

சி.எஸ்.கே பேட்டிங்கின்போது தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரெய்னா, 16 ரன்களை எடுத்து 5,000 ரன்களைக் கடந்தார். இதனால் ஐ.பி.எல் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த நிலையில், இன்று மும்பை அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் 46 ரன்களை கோலி கடந்தால், ஐ.பி.எல் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார். கோலி 156 இன்னிங்ஸில் விளையாடி 4954 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.