முதல் வெற்றி யாருக்கு? - மும்பைக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #RCBvMI | IPL 2019 Match 7. Royal Challengers Bangalore win the toss and elect to field

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (28/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (28/03/2019)

முதல் வெற்றி யாருக்கு? - மும்பைக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி #RCBvMI

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

கோலி

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 7வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளுமே தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வென்று நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் பெங்களூரு அணி இன்று களம்காண்கிறது. மும்பை அணியின் பிளேயிங் லெவனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலிங்கா இடம்பெற்றிருக்கிறார். ஐ.பி.எல் போட்டிகளில் அவர் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டியது. கடந்த ஆண்டு மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மலிங்கா, இந்தாண்டு ஒரு வீரராகக் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. 

மலிங்கா

அதேபோல், முதல் போட்டியில் காயமடைந்த பும்ரா, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பெங்களூரு அணிக்கெதிராக விளையாடியுள்ள 9 போட்டிகளில் மும்பை அணி 7ல் வென்றிருக்கிறது.