`என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு' - பாடகராக மாறிய `புலவர்' ஹர்பஜன் சிங்! | harbhajan singh sings tamil song

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (29/03/2019)

கடைசி தொடர்பு:22:10 (29/03/2019)

`என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு' - பாடகராக மாறிய `புலவர்' ஹர்பஜன் சிங்!

தமிழில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நாளை மறுநாள் தனது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இதற்கான தீவிர பயிற்சியில் சென்னை அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீவிர பயிற்சிக்கு மத்தியில் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், அணிக்கான விளம்பர பாட்டு பாடியுள்ளார். இதன் சாம்பிள் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், ``அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம். என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு. இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல கேளு கேளு இது கானா பாட்டு" எனப் பதிவிட்டுள்ளார். 

ஹர்பஜன்

சென்னை அணிக்காகக் கடந்த ஆண்டு முதல் விளையாடி வரும் ஹர்பஜன் தொடர்ந்து தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னும் தமிழில் ட்வீட் போட்டு வருகிறார். இதனால் அவரைப் பலரும் புலவர் என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இதற்கு அடுத்தபடியாக தற்போது தமிழில் பாடகராகவும் மாறியுள்ளார். ஏற்கெனவே சென்னை அணி வீரர் டுவைன் பிராவோ தமிழ்ப் படம் ஒன்றில் பாடல் பாடிய நிலையில் தற்போது ஹர்பஜனும் பாடியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க