மொஹாலியில் சாதிக்குமா மும்பை? - ஃபீல்டிங் தேர்வு செய்த பஞ்சாப் #KXIPvMI | IPL 2019: KXIP wins toss and elected to field aganist MI

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (30/03/2019)

கடைசி தொடர்பு:16:15 (30/03/2019)

மொஹாலியில் சாதிக்குமா மும்பை? - ஃபீல்டிங் தேர்வு செய்த பஞ்சாப் #KXIPvMI

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

அஷ்வின் - ரோஹித் ஷர்மா

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 9-வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கவரத்திக்குப் பதிலாக முருகன் அஷ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், மும்பை அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் மாற்றமில்லாமல் களமிறங்குகிறது. 

இரு அணிகளின் பிளான்


டாஸுக்குப் பின்னர் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஷ்வின், ``மொஹாலி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. குறிப்பாக கெய்ல் இந்த மைதானத்தை அதிகம் விரும்புவார்’ என்றார். அதேபோல் ரோஹித் ஷர்மா பேசுகையில், டாஸை வென்றிருந்தால் தானும் பேட்டிங் தேர்வு செய்யவே விரும்பியதாகவும் அதனால் டாஸை இழந்ததில் பெரிய வருத்தம் இல்லை'' என்றார். புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6-வது இடத்தில் முறையே கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இருக்கின்றன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வென்றுள்ளன.