டி காக்கால் நிமிர்ந்த மும்பை இந்தியன்ஸ்! - கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 177 ரன்கள் இலக்கு #KXIPvMI | mumbai indians post a total of 176/7 in 20 overs against KXIP

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (30/03/2019)

கடைசி தொடர்பு:17:57 (30/03/2019)

டி காக்கால் நிமிர்ந்த மும்பை இந்தியன்ஸ்! - கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 177 ரன்கள் இலக்கு #KXIPvMI

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்கள் குவித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 9-வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக முருகன் அஷ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மும்பை

அதேநேரம், மும்பை அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் மாற்றமில்லாமல் களமிறங்குகிறது. அதன்படி ஓப்பனிங் ஜோடிகளாக குயிண்டன் டி காக்கும் - ரோஹித் ஷர்மாவும் களம் கண்டனர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இவர்களின் பாட்னர்ஷிப் அரை சதம் கடந்த நிலையில், 32 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் வந்த சூரியகுமார் யாதவ், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டி காக் அரை சதம் அடித்தார்.

மும்பை

60 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின் வந்தவர்களில் ஹர்திக் பாண்டியா தவிர மற்றவர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அஷ்வின், ஹர்தஸ், ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க