``டி20 தான்... ஆனா டெஸ்ட் மாதிரி ஆடுவேன்!'' - மொகாலியில் கரையேறிய பஞ்சாப் #KXIPvsMI | Match report of ipl match 9 KXIP vs MI

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (31/03/2019)

``டி20 தான்... ஆனா டெஸ்ட் மாதிரி ஆடுவேன்!'' - மொகாலியில் கரையேறிய பஞ்சாப் #KXIPvsMI

இப்போது லோக்கல் பாய் யுவராஜின் முறை. இந்த மைதானம் யுவராஜுக்கு தண்ணிப் பட்ட பாடு என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. ஆனால், எதிர்பார்க்கும்போது அடிப்பது யுவி ஸ்டைல் இல்லையே. அநியாயத்திற்கு அடக்கி வாசித்தார்.  

``டி20 தான்... ஆனா டெஸ்ட் மாதிரி ஆடுவேன்!'' - மொகாலியில் கரையேறிய பஞ்சாப் #KXIPvsMI

மும்பை அணி கடந்த ஆட்டத்தில் வென்ற உற்சாகத்தில் இருக்க, இரண்டு ஆட்டங்கள், இரண்டு மோசமான முடிவுகள் என நெகட்டிவ் பப்ளிசிட்டியோடு நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கியது பஞ்சாப். வெற்றி பெற்ற அணி என்பதால் ரோகித் அதே டீமோடு களமிறங்கினார். கடந்த ஆட்டத்தில் அனுபவமின்மையால் தவறுகள் செய்த வருண் சக்ரவர்த்திக்கு பதில் மற்றொரு தமிழக ஸ்பின்னரான முருகன் அஸ்வின் களமிறங்கினார். 

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ஓபனர்களாக களம் கண்டார்கள் ரோகித்தும் டி காக்கும். முதல் ஓவர் வீசியது அஸ்வின். ஐ.பி.எல்லில் பவர்ப்ளேயில் சிறந்த எகானமி வைத்திருப்பது அஸ்வின்தான். அதை மீண்டும் நிரூபிப்பது போல வீசிய இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மறுபக்கம் சமியும் வில்ஜொய்னும் அதிகமாக ரன்களை வாரி வழங்க பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் எடுத்தது மும்பை அணி. ஆனால் பரபரவென ரன்களை சேர்த்த கேப்டன் ரோகித்தை இழந்திருந்தது. 

KXIP vs MI

அடுத்த ஓவரில் மிஸ்டர் கன்சிஸ்டென்ட் சூர்யகுமார் யாதவை எல்.பி.டபிள்யூவாக்கி வெளியேற்றினார் முருகன் அஸ்வின். இப்போது லோக்கல் பாய் யுவராஜின் முறை. இந்த மைதானம் யுவராஜுக்கு தண்ணிப் பட்ட பாடு என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. ஆனால் எதிர்பார்க்கும்போது அடிப்பது யுவி ஸ்டைல் இல்லையே. அநியாயத்திற்கு அடக்கி வாசித்தார்.  

இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவிலும் டி காக் ரன்களை குவிக்கத் தவறவில்லை. சிக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்குமாக பறக்கவிட்டு 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். பஞ்சாப் அணிக்கெதிராக மட்டும் டி காக்கின் பேட் பக்கம் பக்கமாக பன்ச் பேசும். இந்த மேட்ச்சிலும் 60 ஆடிவிட்டு ஓய்ந்தது. அதுவரை சீராக இருந்த ரன்ரேட் சட்டென குறையத் தொடங்கியது.

KXIP vs MI

தடவித் தடவி ஆடிக்கொண்டிருந்த யுவராஜும் அவுட்டாக, பொறுப்பு ஹர்திக் தலையில் விழுந்தது. அவரும் அதற்கேற்றார் போலச் சீக்கிர சீக்கிரமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். பொல்லார்ட் கடைசியாக எப்போது அதிரடி ஆட்டம் ஆடினார் எனக் கேட்டால் கூகுளே குழப்பியடிக்கும். இந்த மேட்ச்சிலும் வெகு சுமாராக ஆடி அவுட்டானார். க்ருணால் பாண்ட்யாவும் பின்னாலேயே நடையைக் கட்ட ஹர்திக் மட்டும் ஸ்கோரை தன் பங்கிற்கு ஏற்றிவிட்டு அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது மும்பை. கடைசி 7 ஓவர்களில் வெறும் 56 ரன்கள் மட்டுமே மும்பையால் எடுக்க முடிந்தது.

ராகுலும் கெயிலும் டார்கெட்டை சேஸ் செய்ய ஓபனர்களாக களமிறங்கினார்கள். மெக்லேனஹன் வீசிய முதல் பாலே அப்பீலுக்கு சென்றது. அம்பயர் தலைகுலுக்க தப்பித்தார் கெய்ல். முதல் 2 ஓவர்களில் எட்டு ரன்கள்தான். 3வது ஓவரில் கெய்ல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்களை பறக்கவிட்டார். அதற்கடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள். கெய்ல் ஷோவிற்குத் தயாரானது ஸ்டேடியம். உடனே பும்ராவை கொண்டுவந்தார் ரோகித். கை மேல் பலன். இரண்டே ரன்கள். 

ஐபிஎல்

அதற்கும் சேர்த்து ஹர்திக் ஓவரில் 14 ரன்கள் குவித்தார் கெய்ல். 'ரைட்டு இனி இருக்கு கச்சேரி' எனப் பஞ்சாப் ரசிகர்கள் ஸ்லீவ்வை மடித்துவிட்டு தயாராக க்ருணால் பாண்ட்யா பாலில் தூக்க்க்.....கி அடித்து அவுட்டானார். ஒன் டவுனில் களமிறங்கிய மயாங்க் கெய்ல் விட்டுச் சென்ற மொமென்ட்டத்தை மெயின்டெயின் செய்ய பேட்டை சுழற்றத் தொடங்கினார். 'என்ன பாஸு ராகுலைக் காணோம்?'' என்கிறீர்களா? கிரவுண்டில் இருந்தவர்களும் அதைத்தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள். டெஸ்ட் மேட்ச் ஆடுவதுபோல அநியாத்திற்கு டொக்கு வைத்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார் ராகுல்.

ஐபிஎல்

முதல் 2 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ஸ்கோர்கள். உலகக் கோப்பை அணியில் இடம் பெற, கண்டிப்பாக இந்த ஆட்டத்தில் ஏதாவது செய்தே ஆகவேண்டும். இந்த பிரஷர் காரணமாகவோ என்னவோ பந்துகளை நிறையவே சாப்பிட்டார் ராகுல். அவருக்கும் சேர்த்து பொறுப்பைச் சுமந்து ஸ்கோரை உயர்த்தினார் மயாங்க். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200-ஐ குறையவே இல்லை. க்ருணால் பாண்ட்யாவை குறி வைத்து வெளுத்த மயாங்க் கடைசியில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரின் பங்கு 21 பந்துகளில் 43 ரன்கள். 

ஐபிஎல்

அகர்வால் அவுட்டாகும் கியர் மாற்றினார் ராகுல். முதலில் ஹர்திக் ஓவரை குறி வைத்தார். 19 ரன்கள். அதன்பின் மலிங்கா ஓவரை! 12 ரன்கள். அடுத்ததாக பும்ராவை! 11 ரன்கள். இப்படி முன்னணி பவுலர்களை குறிவைக்கத் தொடங்கியதுமே மும்பைக்குத் தோல்வியின் சாயல் தென்பட ஆரம்பித்தது. அந்த 3 ஓவர்கள் பஞ்சாப்பின் வெற்றியைத் தீர்மானித்தன. கடைசியாக 8 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் இலக்கை எட்டியது பஞ்சாப். ராகுல் 57 பந்துகளில் 71 ரன்கள். பவுலர்களை அடித்து வெளுக்கும் பாண்டியா பிரதர்ஸ் இந்தத் தடவை அந்தக் கஷ்டத்தை பவுலர்களாக உணர்ந்தார்கள். இருவரும் 7 ஓவர்கள் வீசி 82 ரன்களை பார்சல் கட்டிக் கொடுத்தார்கள்.

இந்த ரிசல்ட் ரோகித்திற்கு நெருக்கடியை நிச்சயம் நெருக்கடியை உண்டாக்கியிருக்கும். அணியில் பொல்லார்டின் இடம், இஷான் கிஷனை தொடர்ந்து பெஞ்ச்சில் உட்கார வைத்திருப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் இனிப் பதில் சொல்ல நேரலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்