குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து! - இலங்கை கேப்டன் மீது பாய்ந்த நடவடிக்கை | srilankan captain Dimuth Karunaratne arrested drink and drive

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:43 (01/04/2019)

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து! - இலங்கை கேப்டன் மீது பாய்ந்த நடவடிக்கை

குடிபோதையில் கார் ஒட்டியதாக இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை கேப்டன்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருந்துவரும் இவரது கேப்டன்ஷிப் காரணமாக, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை இலங்கை அணி படைத்தது. இந்த நிலையில், இன்று காலை குடிபோதையில் வண்டி ஒட்டியதாக அவரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் கின்ஸி சாலையில் கார் ஒட்டிச் செல்லும்போது அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ ஒன்றின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அப்போது அங்கு வந்து போலீஸார் விபத்து குறித்து கருணாரத்னேவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் வாரியம், ``கருணாரத்னே விவகாரத்தில் சட்டரீதியான விசாரணை நடந்து வருகிறது. இதில் கிரிக்கெட் வாரியமும் கவனம் செலுத்தும். தவறு செய்தால் அவர் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை பாயும்" எனக் கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க