ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் சென்னை! - ஃபீல்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் #CSKvRR | IPL 2019: RR won the toss and elected to bowl first against CSK

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:15 (01/04/2019)

ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் சென்னை! - ஃபீல்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் #CSKvRR

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. 

தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 12வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

சென்னை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சாட்னர் களமிறங்குகிறார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது. 

பிளேயிங் லெவன்

சென்னை - பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல் தொடக்க போட்டியில் பெங்களூர் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனால், சேப்பாக்கம் மைதானம் மீது விமர்சனங்கள் எழுந்தன. அதனால், இன்றைய போட்டியில் பிட்ச் முக்கிய பேசுபொருளாக இருக்கும். இதுவரை இவ்விரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன அதில், சென்னை அணி 12 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 7 போட்டிகளிலும் வென்றிருக்கின்றன. ஆல்ரவுண்டர் பிராவோ இதுவரை சென்னை அணிக்காக 97 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினால், சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்தும் முதல் பவுலர் என்ற பெருமையைப் பெறுவார்.