`இனி டாஸுக்குப் பதில் ட்விட்டர் Poll; ஜெர்சியில் இன்ஸ்டா ஐடி!’ - என்னாச்சு ஐ.சி.சி-க்கு? | ICC announced new changes for its new test championship 2019. But why?

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (01/04/2019)

கடைசி தொடர்பு:12:42 (01/04/2019)

`இனி டாஸுக்குப் பதில் ட்விட்டர் Poll; ஜெர்சியில் இன்ஸ்டா ஐடி!’ - என்னாச்சு ஐ.சி.சி-க்கு?

ந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிறைய புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐ.சி.சி. இந்தத் தொடரில் ODI போலவே வீரர்கள் ஜெர்சி எண்களுடன் விளையாட அனுமதிக்கப்படுவதாக அண்மையில்தான் அறிவித்திருந்தது.

ஐ சி சி யின் போஸ்ட்

தற்போது அத்துடன் வீரர்களின் இன்ஸ்டாகிராம் ஐடியையும் அச்சிட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறது ஐ.சி.சி. இந்த அம்சங்கள் இளைஞர்களை ஈர்க்கும் எனவும் தெரிவித்திருக்கிறது. இதேபோல இதுவரைக்கும் நடைமுறையில் இருந்த டாஸ் போடும் நடைமுறைக்குப் பதில், ட்விட்டர் வாக்கெடுப்பு அமல்படுத்தப்படவிருக்கிறது. இதன்படி போட்டியை நடத்தும் நாட்டிலிருக்கும் யூசர்கள் எந்த டீம் பேட்டிங் பௌலிங் என்பதை முடிவுசெய்யலாம் (!)

ஐ.சி.சி ட்வீட்

இதற்கடுத்த அம்சம்தான் சுவாரஸ்யம். ஒருவேளை மைதானத்தின் சுற்றுப்புற வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் வீரர்கள் ஷார்ட்ஸ் போட்டு விளையாடவும் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வர்ணனையாளர்கள் ஃபீல்டருக்கு அருகே நிற்க அனுமதித்தல், நோ பால் மற்றும் டாட் பால்களை `Fault’ மற்றும் `Ace’ என அழைப்பது போன்ற இன்னும் சில அம்சங்களையும் சேர்த்திருக்கிறது. இந்தப் புதிய அம்சங்கள் சரியா தவறா என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன என இந்த செய்தியை முடிக்கலாம்தான். ஆனால், இன்னைக்கு தேதிய கவனிச்சீங்களா பாஸு? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க