கெய்ல் இல்லாமல் களம்காணும் பஞ்சாப் - ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி #KXIPvDC | DC wins toss and elected to field aganist kxip

வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (01/04/2019)

கடைசி தொடர்பு:21:35 (01/04/2019)

கெய்ல் இல்லாமல் களம்காணும் பஞ்சாப் - ஃபீல்டிங்கை தேர்வு செய்த டெல்லி #KXIPvDC

ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அவேஷ் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் குர்ரான் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளார்.. 

டாஸுக்குப் பின்னர் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஷ்வின், ``அனைத்துப் போட்டிகளிலும் முழுத் திறனையும் வெளிப்படுத்தி வருகிறோம். ஓர் அணியாக நன்றாக செட் ஆகிவிட்டோம். அது நன்றாக வேலை செய்யும் என நினைக்கிறேன்’ என்றார். புள்ளிப்பட்டியலில் 4 மற்றும் 5-வது இடத்தில் முறையே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருக்கின்றன. இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க