`சொதப்பல் ஓப்பனிங்; கைகொடுத்த மில்லர் - டெல்லிக்கு 167 ரன்கள் இலக்கு! #KXIPvDC | punjab scores 166/9 runs against delhi capitals

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (01/04/2019)

கடைசி தொடர்பு:22:01 (01/04/2019)

`சொதப்பல் ஓப்பனிங்; கைகொடுத்த மில்லர் - டெல்லிக்கு 167 ரன்கள் இலக்கு! #KXIPvDC

டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐய்யர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அவேஷ் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அதேநேரம், பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கெய்ல் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக சாம் குர்ரான் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்தார்.

பஞ்சாப்

கெய்ல் இல்லை என்பதால் கேஎல் ராகுலுடன் சாம் குர்ரான் ஓப்பனிங் வீரராகக் களம்புகுந்தார். முதல் ஓவரை அதிரடியுடன் துவக்கிய கேஎல் ராகுல் 11 ரன்களுடன் 2வது ஓவரிலேயே வெளியேற, 20 ரன்களில் நான்காவது ஓவரிலேயே சாம் குர்ரான் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மாயங் அகர்வால் கைகொடுக்கத் தவறினாலும், சர்ப்ராஸ் கான் - டேவிட் மில்லர் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 39 ரன்களில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து மில்லரும் பன்ட்டிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பின் வந்த மற்ற வீரர்கள் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க