`மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் பெங்களூரு' - முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா கோலி? #RRvRCB | rajasthan royals wins the toss and elects to bowl first against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (02/04/2019)

கடைசி தொடர்பு:19:51 (02/04/2019)

`மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் பெங்களூரு' - முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா கோலி? #RRvRCB

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது.

ஐ.பி.எல் தொடரின் 14வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸின் போது பேசிய விராட் கோலி, ஒரு வெற்றி கூட இல்லாமல் தொடங்குவது எப்போதும் நல்லது அல்ல. ஆனால், விளையாட்டில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். இது பெரிய தொடர். இதில் பங்கேற்று நிறைய வெற்றிகளைப் பெற வேண்டும். நாங்கள் டாஸில் வெற்றிபெற்றால் முதலில் பேட்டிங் செய்யலாம் என்றே நினைத்திருந்தோம். அதுபோலவே நடந்துள்ளது" என்றார்.

பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவம் துபேவுக்கு பதிலாக அக்சீப் நாத்தும், இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மனுக்கு பதிலாக நவ்தீப் சைனியும் களமிறங்குகின்றனர். இதேபோல் ஸ்டோனிஸும் இன்று களமிறங்குகிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், ஜெயதேவ் உனட்கட்டுக்கு பதிலாக வருண் ஆரோனும் களம் காண்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க