கோபால் மேஜிக்... ஆர்.சி.பி.யை மீட்ட பார்த்திவ், ஸ்டோனிஸ்... ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு! #RRvsRCB | Royal Challengers Bangalore scores 158 runs against rajasthan royals

வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (02/04/2019)

கடைசி தொடர்பு:21:49 (02/04/2019)

கோபால் மேஜிக்... ஆர்.சி.பி.யை மீட்ட பார்த்திவ், ஸ்டோனிஸ்... ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு! #RRvsRCB

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

ஐ.பி.எல் தொடரின் 14வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவம் துபேவுக்கு பதிலாக அக்சீப் நாத்தும், இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மனுக்கு பதிலாக நவ்தீப் சைனியும் களமிறங்குகின்றனர். இதேபோல் ஸ்டோனிஸும் இன்று களமிறங்குகிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், ஜெயதேவ் உனட்கட்டுக்கு பதிலாக வருண் ஆரோனும் களம் காண்கின்றனர். 

பார்த்தீவ் படேலுடன் இந்த முறை விராட் கோலி ஓப்பனிங் வீரராக களம்புகுந்தார். நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது இந்த ஜோடி. கடந்த போட்டிகளை காட்டிலும் இந்தப் போட்டியில் ஓரளவுக்கு ஆடினார் கேப்டன் கோலி. அவர் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸ் 13 ரன்களிலும், ஹெட்மேயர் ஒரு ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் இருந்த பார்த்தீவ் படேலுடன் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 50 ரன்கள் வரை இவர்களின் பாட்னர்ஷிப் சென்றது.

சிறப்பாக ஆடிய பார்த்தீவ் படேல் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார். அவரின் அதிரடி உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் இளம்வீரர் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க