`இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் மும்பை' - வான்கடேவில் கோலோச்சுமா சென்னை? #MIvCSK | chennai super kings won the toss and choose bowl against mumbai indians

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (03/04/2019)

கடைசி தொடர்பு:19:53 (03/04/2019)

`இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் மும்பை' - வான்கடேவில் கோலோச்சுமா சென்னை? #MIvCSK

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல் தொடரின் 15வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சென்னை அணி. அதேநேரம் மூன்று போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என முனைப்புடன் களமிறங்கியுள்ளது. 

மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிட்சல் மெக்லெனஹனுக்குப் பதிலாக பெஹ்ரென்ட்ரூப்பும், மாயங் மார்கண்டேவுக்குப் பதிலாக ராகுல் சஹாரும் இடம்பிடித்துள்ளனர். சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்சல் ஸ்டென்னருக்குப் பதிலாக மொஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டாஸின் போது பேசிய ரோஹித் ஷர்மா, ``இது எங்களுக்கு முக்கியமான ஆட்டம். மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வியடைந்ததை நியாயப்படுத்த முடியாது. சிறந்த பேட்டிங் லைன் அப் வைத்துள்ளோம். அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க