நங்கூரமிட்ட சூர்யகுமார்; அதிரடி காட்டிய பொல்லார்ட், ஹர்திக் - சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு! #MIvCSK | Mumbai Indians 170 scores runs against chennai super kings 

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (03/04/2019)

கடைசி தொடர்பு:21:53 (03/04/2019)

நங்கூரமிட்ட சூர்யகுமார்; அதிரடி காட்டிய பொல்லார்ட், ஹர்திக் - சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு! #MIvCSK

சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயித்து மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை

ஐ.பி.எல் தொடரின் 15வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன்  தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிட்சல் மெக்லெனஹனுக்குப் பதிலாக பெஹ்ரென்ட்ரூப்பும், மாயங் மார்கண்டேவுக்குப் பதிலாக ராகுல் சஹாரும் இடம்பிடித்துள்ளனர். சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்சல் ஸ்டென்னருக்குப் பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். 

மும்பை அணிக்கு குயின்டன் டி காக் - ரோஹித் ஷர்மா இணை துவக்கம் தந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த டி காக் இந்த முறை ஏமாற்றினார். மூன்றாவது ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோஹித்தும் வெளியேறினார். 13 ரன்கள் எடுத்த போது தோனி அவரை ஸ்டெம்பிங் செய்து அவுட் ஆக்கினார். அடுத்த ஓவரிலேயே யுவராஜ் சிங் வெளியேற மும்பை அணி தடுமாறியது. இருப்பினும் குர்னால் பாண்டியா - சூரியகுமார் யாதவ் இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி பாட்னர்ஷிப்பை கொண்டு சென்றது.

குர்னால் பாண்டியா 42 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்துக்கொண்டிருந்த சூரியகுமார் அரை சதம் கடந்தார். 59 ரன்களில் அவரும் வெளியேற கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா - பொல்லார்ட் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. அவர்களில் அதிரடி உதவியுடன் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தாகூர் தவிர பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க