ஹைதராபாத்தின் அசத்தல் பௌலிங்... - 129 ரன்களுடன் திருப்திபட்டுக்கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ்! | Delhi Capitals 129/8 in 20 overs against SunRisers Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (04/04/2019)

கடைசி தொடர்பு:21:50 (04/04/2019)

ஹைதராபாத்தின் அசத்தல் பௌலிங்... - 129 ரன்களுடன் திருப்திபட்டுக்கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ்!

ஹைதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

ஐபிஎல் சீஸனின் 16-வது லீக் போட்டி, இன்று டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற புவனேஷ்வர் குமார், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, வழக்கம்போல தவான் - பிரித்திவி ஷா இணை துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் துவக்கினார் பிரித்திவி ஷா. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினாலும் புவனேஷ்வர் குமாரின் அடுத்த ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார் பிரித்திவி. 

அவரைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே தவானும் வெளியேறினார். கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் சிறப்பாக விளையாடினார். 43 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அவுட் ஆனார். மற்றவர்கள், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேற, டெல்லி அணி தடுமாறியது. இடையில், கிறிஸ் மோரிஸ் மற்றும் அக்ஸர் படேல் சிறிது ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், முகமது நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க