முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்.சி.பி?! - ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்த கொல்கத்தா! #RCBvKKR | IPL 2019: KKR wins the toss and elected to field against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (05/04/2019)

கடைசி தொடர்பு:20:05 (05/04/2019)

முதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்.சி.பி?! - ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்த கொல்கத்தா! #RCBvKKR

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது.  

ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். 

ஆர்.சி.பி பிளேயிங் லெவன்


பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெட்மெயருக்குப் பதிலாக டிம் சவுத்தியும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பவன் நெகியும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, டிம் சவுத்தி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்

கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக, நிகில் நாயக்கிற்குப் பதிலாக சுனில் நரேன் களமிறங்குகிறார். ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய பெங்களூரு அணி தடுமாறிவருகிறது. டாஸின்போது பேசிய கேப்டன் விராட் கோலி, ''எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அத்துடன், பயமில்லாமல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்''என்றார்.