``மூணு நாள்ல மீட் பண்ணலாம்!” - சென்னை கொல்கத்தா அணிகளின் ட்விட்டர் அலப்பறை | CSK and KKR team tweets

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (06/04/2019)

கடைசி தொடர்பு:08:20 (06/04/2019)

``மூணு நாள்ல மீட் பண்ணலாம்!” - சென்னை கொல்கத்தா அணிகளின் ட்விட்டர் அலப்பறை

கோலி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் நடந்த ஆட்டத்தில் பிரமிப்பான வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவரும் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நேற்றைய ஆட்டத்தில் 205 ரன்கள் விளாசியது. இமாலய இலக்கை நிர்ணயித்ததால் எப்படியும் பெங்களூரு அணி வென்றுவிடும் என பெங்களூர் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், ரசல் அந்த எண்ணங்களை ஸ்டேடியத்துக்கு வெளியே அடித்துப் பறக்க விட்டார். 

ரசல்

5 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், வெற்றிக்கு 24 பந்துகளில் 66 ரன்கள் தேவைப்பட்டது. இந்தக் கடினமான இலக்கை 5 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே கடந்தது கே.கே.ஆர். வெறும் 13 பந்துகளில் 48 ரன்கள் விளாசிய ரசல் நேற்றைய ஆட்டத்தில் 'மரண மாஸ்' காட்டினார். 

ஆட்டம் முடிந்த பிறகு  சமூக வலைதளங்களில் ரசலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா அணிக்கும் ரசலுக்கும் வாழ்த்தைத் தெரிவித்து. அதை ரீ- ட்வீட் செய்த கே.கே.ஆர்,  `மூணு நாள்ல மீட் பண்ணலாம்’ என ரிப்ளை செய்தது. 

கொல்கத்தா அணியின் ட்வீட்

வரும் 9-ம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தாவுடன் மோதவுள்ளது. அதற்காகத்தான் இந்த அழைப்பு. தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணி தமிழில் ட்வீட் செய்ய, பதிலுக்குச் சென்னையும்  `வடிவேல் ரியாக்‌ஷன்’ கொடுக்க, மைதானத்தில் மட்டுமல்ல, சமூகவலைதளத்திலும் அதகளம் செய்வோம் என்கிறன ஐபிஎல் அணிகள்.