கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள்! - தோனி - ராயுடு அதிரடியால் 160 ரன்கள் குவித்த சி.எஸ்.கே #CSKvKXIP | IPL 2019: CSK sets 161 runs target for KXIP

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:18:04 (06/04/2019)

கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள்! - தோனி - ராயுடு அதிரடியால் 160 ரன்கள் குவித்த சி.எஸ்.கே #CSKvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

டூப்ளசிஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 

ராயுடு - தோனி

இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. காயம் காரணமாக டிவைன் பிராவோ விளையாடவில்லை. அதேபோல், மோஹித் ஷர்மா மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக டூப்ளசிஸ், ஹர்பஜன் மற்றும் சமீபத்தில் அணியில் சேர்க்கப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலெயின் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஹர்டூஸ் வில்ஜோன் மற்றும் முஜீப் ஆகியோருக்குப் பதிலாக கிறிஸ் கெய்ல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.


சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் தொடங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுக்கப்படவே, இரண்டாவது ஓவரை பஞ்சாப் கேப்டன் அஷ்வின் வீசினார். பவர் பிளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 54 ரன்கள் சேர்த்தது. 7வது ஓவரை வீசிய தமிழக வீரர் முருகன் அஷ்வின், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்த ஓவரில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வாட்சன் - டூப்ளசிஸ் ஜோடி 56 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூப்ளசிஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தத் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ், முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். டூப்ளசிஸ் மற்றும் ரெய்னா ஆகியோர் அஷ்வின் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். டூப்ளசிஸ் 54 ரன்களிலும் ரெய்னா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அஷ்வின்

இதையடுத்து 4வது விக்கெட்டுக்குக் கைகோத்த தோனி - ராயுடு ஜோடி மெதுவாக ரன் குவிக்கத் தொடங்கினர். கடைசி ஓவர்களில் இந்த ஜோடி ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தவே, சி.எஸ்.கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு பந்துகளில் 60 ரன் சேர்த்தது. தோனி 23 பந்துகளில் 37 ரன்களுடனும் ராயுடு 15 பந்துகளில் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.