யுவராஜ், மலிங்கா இல்லாமல் களமிறங்கும் மும்பை! - ஃபீல்டிங் தேர்வுசெய்த ஹைதராபாத் #SRHvMI | Match 19. Sunrisers Hyderabad win the toss and elect to field

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (06/04/2019)

கடைசி தொடர்பு:20:10 (06/04/2019)

யுவராஜ், மலிங்கா இல்லாமல் களமிறங்கும் மும்பை! - ஃபீல்டிங் தேர்வுசெய்த ஹைதராபாத் #SRHvMI

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. 

ஹைதராபாத் பிளேயிங் லெவன்

ஹைதராபாத் அணி, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மலிங்கா இலங்கை திரும்பியிருப்பதால், அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அதேபோல, யுவராஜுக்கும் இன்றைய பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக இஷான் கிஷான் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்


டாஸின்போது பேசிய ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார், கேன் வில்லியம்ஸன் காயத்தில் இருந்து விரைவாகக் குணமடைந்துவருவதாகத் தெரிவித்தார். ரோஹித் ஷர்மா பேசுகையில், சென்னை அணிக்கெதிரான வெற்றி, நம்பிக்கையை அதிகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.