முதல் வெற்றிக்காகப் போராடும் ஆர்.சி.பி! - ஃபீல்டிங் தேர்வு செய்த டெல்லி #RCBvDC | IPl 2019: DC win the toss and choose to bowl against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (07/04/2019)

கடைசி தொடர்பு:15:50 (07/04/2019)

முதல் வெற்றிக்காகப் போராடும் ஆர்.சி.பி! - ஃபீல்டிங் தேர்வு செய்த டெல்லி #RCBvDC

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

விராட் கோலி

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

ஆர்.சி.பி. பிளேயிங் லெவன்

இன்றைய போட்டியில் மோதும் இரண்டு அணிகளுமே இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில், டெல்லி அணி 2 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. 

டெல்லி பிளேயிங் லெவன்

டெல்லி அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது. டாஸின்போது பேசிய டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், `வீரர்களைக் குறைசொல்ல நாங்கள் விரும்பவில்லை. அதனால், பிளேயிங் லெவனை மாற்றாமால் தொடர்ச்சியாகக் களமிறங்க விரும்புகிறோம்' என்றார். விராட் கோலி பேசுகையில், `நாங்கள் டாஸை வென்றிருந்தாலும் ஃபீல்டிங் செய்யவே முடிவெடுத்திருப்போம். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறோம்' என்றார். இன்றைய போட்டியில் பச்சை நிற ஜெர்ஸியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.