`மும்பைக்கும் சி.எஸ்.கேவுக்கும் இதுதான் வித்தியாசம்!' - அனுபவம் பகிரும் `புலவர்' ஹர்பஜன் #CSK #MI | Harbhajan Singh talk about csk and MI

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (08/04/2019)

கடைசி தொடர்பு:18:33 (08/04/2019)

`மும்பைக்கும் சி.எஸ்.கேவுக்கும் இதுதான் வித்தியாசம்!' - அனுபவம் பகிரும் `புலவர்' ஹர்பஜன் #CSK #MI

மும்பை அணிக்கும் சென்னை சூப்பர்கிங்க்ஸ்க்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன்சிங்

ஐ.பி.எல்  போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஹர்பஜன்சிங் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். ஆர்.சி.பிக்கு எதிரான முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை தட்டித்தூக்கி அனைவரின் கவனைத்தையும் ஈர்த்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்திலும் விக்கெட்டுகளால் மிரட்டினார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றிருக்கிறது. அந்த மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் ஹர்பஜன் சிங்.

கடந்த சீசன் முதல் சி.எஸ்.கேவுக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே-வுக்கும் மும்பைக்குமான வித்தியாசத்தை அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``மும்பை அணி மீது நான் பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. அவர்கள் வழக்கம்போல இந்தாண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். மும்பை அணியைப் பொறுத்தவரை வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் பெரிய  அளவில் இருக்கும். ஆனால், சி.எஸ்.கேவில் நிலவரம் அப்படியல்ல. எதையும்  எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனநிலை கொண்டது சி.எஸ்.கே. இங்கு வெற்றி என்பது வாழ்வா சாவா பிரச்னை இல்லை” என்று தெரிவித்துள்ளார். சி.எஸ்.கேவுக்காக விளையாடத் தொடங்கியது முதல், தமிழில் ட்வீட்டி வரும் ஹர்பஜனை, நெட்டிசன்கள் புலவர் என்றே அழைத்து வருகின்றனர்.