பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் களமிறங்கும் எஸ்.ஆர்.ஹெச்! - ஃபீல்டிங் தேர்வுசெய்த பஞ்சாப் #KXIPvSRH | IPL 2019: KXIP won the toss and elected to bowl against SRH

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (08/04/2019)

பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் களமிறங்கும் எஸ்.ஆர்.ஹெச்! - ஃபீல்டிங் தேர்வுசெய்த பஞ்சாப் #KXIPvSRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ்வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

அஷ்வின்

மொஹாலி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ்வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

கிங்ஸ்லெவன் பஞ்சாப் பிளேயிங் லெவன்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆண்ட்ரூ டை மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோருக்குப் பதிலாக முஜீப் மற்றும் அங்கித் ராஜ்புத் ஆகியோர் இன்றைய போட்டியில் களம்காண்கிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பொறுத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் களம்காண்கிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்


டாஸின்போது பேசிய அஷ்வின், மைதானத்தைக் கருத்தில்கொண்டு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எஸ்.ஆர்.ஹெச் தொடக்கவீரர்கள் குறித்து பேசிய அஷ்வின், `அவர்கள் உலகத்தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்கள். பேட்ஸ்மேனுக்கு முன்பாக பந்தை நன்கு சுழலச் செய்யவே முயல்வோம்' என்றார். புவனேஷ்வர் குமார் பேசுகையில், `மிடில் ஆர்டரில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. கேப்டன் பொறுப்பை ரசிப்பதுடன், ஒரு வீரராகவும் நான், என்னை வளர்த்து வருகிறேன்' என்றார்.