ரஸல், நரேன், லின்... கொல்கத்தாவை வீழ்த்துமா தோனியின் ஸ்பின் அட்டாக்? #CSKVsKKR | Will Chennai's spin attack beat Kolkatta?

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (09/04/2019)

கடைசி தொடர்பு:16:57 (09/04/2019)

ரஸல், நரேன், லின்... கொல்கத்தாவை வீழ்த்துமா தோனியின் ஸ்பின் அட்டாக்? #CSKVsKKR

இதுவரை நான்கு இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆடி 207 ரன்கள் அடித்திருக்கிறார் ரஸல். இதில் எல்லாமே டெத் ஓவர்களில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டவை. இவரின் ஸ்ட்ரேக் ரேட் 268. இதுவரை 22 சிக்ஸர்கள் அடித்து சிக்ஸர் லிஸ்ட்டிலும் லீடிங்கில் இருக்கிறார்.

ரஸல், நரேன், லின்... கொல்கத்தாவை வீழ்த்துமா தோனியின் ஸ்பின் அட்டாக்? #CSKVsKKR

சென்னை - கொல்கத்தா இரு அணிகளும் 5 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் சென்னையை முந்தியிருக்கும் கொல்கத்தா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இன்றைய வெற்றி/தோல்வி நம்பர் ஒன் இடம் யாருக்கானது என்பதை உறுதி செய்யும். #CSKVsKKR

கொல்கத்தாவின் ப்ளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே ப்ளேயிங் லெவனுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, சுனில் நரேன் எனத் தரமான மூன்று ஸ்பின்னர் ஆப்ஷன்களுடன் இருக்கிறது கொல்கத்தா. சுனில் நரேன் ஆஃப் ஸ்பின், பியூஷ் சாவ்லா லெக் ஸ்பின், குல்தீப் இடது கை சைனாமேன் பெளலிங் என ஸ்பின்னின் மூன்று வெரைட்டிகளுமே கொல்கத்தாவில் இருக்கிறது. சென்னை பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களைவிட ஸ்பின்னர்கள்தான் எக்கனாமிக்கலாகப் பந்து வீசுகிறார்கள். ஸ்பின்னர்களை சமாளிப்பதுதான் பேட்ஸ்மேன்களுக்கு பிரச்னையாக இருக்கும். அதனால் இந்த மூன்று ஸ்பின்னர்கள் சென்னைக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னே, ஆண்ட்ரே ரஸல் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள்.

#CSKVsKKR

கொல்கத்தாவின் ஸ்பின் அட்டாக்கைப் போலவே பேட்டிங் பலமும் அதிகம். கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நித்திஷ் ராணா, ஷுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல் எனக் கொல்கத்தாவின் பேட்டிங் ஆர்டர் செம ஃபார்மில் இருக்கிறது. டாப் ஆர்டர் சொதப்பினாலும் லோயர் ஆர்டரில் இருக்கும் ரஸல், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பேட்டிங் கொல்கத்தாவுக்கு கைகொடுக்கும்.

#CSKVsKKR

இதுவரை நான்கு இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆடி 207 ரன்கள் அடித்திருக்கிறார் ரஸல். இதில் எல்லாமே டெத் ஓவர்களில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டவை. இவரின் ஸ்ட்ரைக் ரேட் 268. இதுவரை 22 சிக்ஸர்கள் அடித்து சிக்ஸர் லிஸ்ட்டிலும் லீடிங்கில் இருக்கிறார். பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் வியூகம் வகுத்து கெயிலை சீக்கிரமே அவுட் செய்ததுபோலவே, ரஸலுக்கு எதிரான வியூகத்தை தோனி அண்ட் கோ வகுக்க வேண்டும். இம்ரான் தாஹீரைத்தான் ரஸலுக்கு எதிரான தோனி பயன்படுத்தக்கூடும். 

சென்னையின் ப்ளேயிங் லெவன்!
பஞ்சாபுக்கு எதிராக விளையாடிய அதே ப்ளேயிங் லெவன்தான் இன்றைய போட்டியிலும் இருக்கும். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது `சான்ட்னரை தேவையைப் பொறுத்துப் பயன்படுத்துவோம்’ என்றார் பயிற்சியாளர் ஸ்டீவன் ஃப்ளெம்மிங். ஆனால் ஜடேஜா, சான்ட்னர் இருவருமே இடது கை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னர்கள் என்பதோடு, ஜடேஜா பேட்டிங்கிலும் கைகொடுப்பார், உள்ளூர் வீரர் என்பதால் ஜடேஜாவையே தோனி டிக் அடிப்பார். ஆஃப் ஸ்பின்னை ஹர்பஜனும், லெக் ஸ்பின்னை தாஹிரும் பார்த்துக்கொள்வார்கள். க்ருலின், சாஹர் இருவரும் ஸ்பீட் அட்டாக்.

தோனி

சென்னையின் பேட்டிங் லைன் அப்பிலும் மாற்றங்கள் இருக்காது. டுப்ளெஸ்ஸி, வாட்ஸன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ் என்பதாகத்தான் பேட்டிங் ஆர்டர் இருக்கும். 

டாஸ்!
டாஸ் இன்றைய போட்டியில் மிக முக்கியமானது. கடந்தவாரம் நடைபெற்ற இரவுப்போட்டியில் சென்னையில் பனி அதிகம் இருந்தது. இதனால் இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி திணறியது. எனவே டாஸ் வென்றால் இரண்டு அணி கேப்டன்களுமே பேட்டிங்கைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அதாவது தொடர்ந்து 28 போட்டிகளாக டாஸ் வென்றால் சேஸிங்கையே தேர்ந்தெடுத்து வருகிறது கொல்கத்தா. ஆனால், அந்த முடிவு இன்று மாறக்கூடும். 

#CSKVsKKR

2019 ஐ.பி.எல்-ன் மிக முக்கியமான போட்டி இது. பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே சிறப்பாக இருக்கும் கொல்கத்தாவை வீழ்த்துவது கடினம். தோனியின் கேப்டன்ஸியிலும் ஸ்பின்னர்களின் திறமையிலுமே சென்னையின் வெற்றி அடங்கியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்