`மாற்றமில்லா பிளேயிங் லெவன்!' - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே #CSKvKKR | IPL2019: CSK wins the toss and opt to bowl against KKR

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:50 (09/04/2019)

`மாற்றமில்லா பிளேயிங் லெவன்!' - டாஸ்வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த சி.எஸ்.கே #CSKvKKR

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

தோனி - தினேஷ் கார்த்திக்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளுமே கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன. சென்னை - கொல்கத்தா அணிகள் இதுவரை 18 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 11 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 7 போட்டிகளிலும் வென்றிருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகள் இடையில் நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் சென்னை 6 போட்டிகளிலும் கொல்கத்தா 2 போட்டிகளிலும் வென்றிருக்கின்றன. அதேபோல், சேப்பாக்கத்தில் நடந்த இவ்விரு அணிகள் இடையிலான போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 3 முறை மட்டுமே வென்றிருக்கிறது. சேஸிங் செய்த அணியே 5 முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.