`அசத்திய பௌலர்கள்; கடைசி நேரத்தில் கரையேற்றிய ஸ்ரேயாஸ்' - சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு! #RRvCSK | rajasthan royals post a total of 151/7 on board against chennai super kings

வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (11/04/2019)

கடைசி தொடர்பு:21:43 (11/04/2019)

`அசத்திய பௌலர்கள்; கடைசி நேரத்தில் கரையேற்றிய ஸ்ரேயாஸ்' - சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு! #RRvCSK

சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐ.பி.எல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் இரண்டு மாற்றங்களும் ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்களும் செய்யப்பட்டன. ஹர்பஜன் உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மிட்சேல் சாண்டரும், ஸ்காட் குகேஜிலினுக்குப் பதிலாக ஷர்துல் தாகூரும் இடம்பிடித்துள்ளனர். இதேபோல் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், உனட்கட் ஆகியோருடன் 17 வயதே ஆகும் ரியான் பராக் என்னும் இளைஞரும் புதுமுகமாகக் களமிறங்கினார். 

அதன்படி ரஹானேவும் ஜோஸ் பட்லரும் ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங் கொடுத்தனர். இந்த ஜோடியை மூன்றாவது ஓவரிலேயே பிரித்தார் தீபக் சஹார். அவரின் பந்துவீச்சில் ரஹானே அவுட் ஆகி வெளியேற அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஸ்மித், திரிபாதி ஆகியோர் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் சிறிது அதிரடியாக ஆடி 28 ரன்கள் சேர்த்தார். பின்னர் கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் கோபால் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா, தாகூர், சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க