தோனியின் 58-ல் 32 மற்றும் 1 `நோ’ ஓட்டம்... வெளுத்து விழுந்த ஜடேஜா... சாத்திய சான்ட்னர்..! #RRvCSK | Dhoni's Running... Santner sixer... Last over twists and Turns

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (12/04/2019)

கடைசி தொடர்பு:14:34 (12/04/2019)

தோனியின் 58-ல் 32 மற்றும் 1 `நோ’ ஓட்டம்... வெளுத்து விழுந்த ஜடேஜா... சாத்திய சான்ட்னர்..! #RRvCSK

சென்னையில் ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவு வரை கொல்கத்தாவுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 6வது மணி நேரத்தில் அதாவது காலை 5 மணிக்கெல்லாம் ஜெய்ப்பூருக்கு ஃப்ளைட் பிடிக்க சென்னை விமான நிலையத்தில் இருந்தது. ஒரு நாள் இடைவெளியில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் மேட்ச். சென்னை அணி சோர்வாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர்.

தோனியின் 58-ல் 32 மற்றும் 1 `நோ’ ஓட்டம்... வெளுத்து விழுந்த ஜடேஜா... சாத்திய சான்ட்னர்..! #RRvCSK

2019 ஐபிஎல் சீசனின் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். 7 போட்டிகளில் 6-ல் வெற்றி. இதில் கடைசியாக ராஜஸ்தானிடம் பெற்ற த்ரில்லிங் வெற்றிதான் நெயில் பைட்டர். பவர் ப்ளே ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் போய்விட தோனியும், ராயுடுவும் பார்ட்னர்ஷிப்போட்டு கரைசேர முயற்சிசெய்ய கடைசி ஓவரில் பல களேபரங்கள்... சென்னை வென்றது எப்படி?! #RRvCSK

சென்னையில் ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவு வரை கொல்கத்தாவுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 6 மணி நேரத்தில் அதாவது காலை 5 மணிக்கெல்லாம் ஜெய்ப்பூருக்கு ஃப்ளைட் பிடிக்க சென்னை விமான நிலையத்தில் இருந்தது. ஒரு நாள் இடைவெளியில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் மேட்ச். சென்னை அணி சோர்வாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறு!

டாஸ்!

டாஸ் வென்ற தோனி ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் என்பதால் இரண்டு இடது கை ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது என முடிவெடுத்து ஹர்பஜனுக்கு பதிலாக மிட்ச்செல் சான்ட்னரை களமிறக்கினார் தோனி. சான்ட்னர் உள்ளே வந்ததால் வாட்ஸன், டுப்ளெஸ்ஸி, தாஹீர் என வெளிநாட்டு வீரர்களின் ஸ்லாட் முழுமையானதால் ஸ்காட் குகலினுக்கு பதிலாக ஷ்ரதுல் தாக்கூர் அணிக்குள் வந்திருந்தார். ராஜஸ்தானும் அஸாமைச் சேர்ந்த 17 வயது ஆல்ரவுண்டர் ரியான் பராக்கை அணிக்குள் கொண்டுவந்திருந்தது.

தோனி - #RRvCSK

விக்கெட் மேல் விக்கெட்!

பவர்ப்ளே ஓவர்களில் சாஹர், சான்ட்னர், தாக்கூர் என மூன்று பெளலர்களைப் பயன்படுத்தினார் தோனி. சாஹாரின் ஓவரில் ரஹானே 14 ரன்களிலும், தாக்கூர் ஓவரில் பட்லர் 23 ரன்களிலும் அவுட் ஆக, சான்ட்னரின் ஓவரில் 6 ரன்களுக்கு சஞ்சு சாம்சன் அவுட். பவர்ப்ளே முடிவில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது ராஜஸ்தான். அதன்பிறகும் விக்கெட்டுகள் விழுவது தொடர்ந்துகொண்டேயிருந்தது. த்ரிபாதி, ஸ்மித் என அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரவீந்திர ஜடேஜா. இதனால் 11 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ராஜஸ்தான்.

இளம் வீரர் பராக், ஸ்டோக்ஸுடன் கூட்டணி சேர்ந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. 16 ரன்களில் தாக்கூர் பராக்கை அவுட் ஆக்கினார். டெத் ஓவர்களில் சிக்ஸர்களாகப் பறக்கவிடுவார் என ஸ்டோக்ஸை எதிர்பார்த்து ராஜஸ்தான் ரசிகர்கள் காத்திருக்க, 19-வது ஓவரில் ஸ்டோக்ஸ் அவுட். 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார் ஸ்டோக்ஸ். கடைசி ஓவர் தாக்கூர். ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் எனக் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க மொத்தமாக 151 ரன்களை தொட்டது ராஜஸ்தான்.

அதிர்ச்சியில் ஆரம்பித்த சென்னை!

சென்னை சூப்பர் கிங்ஸின் டாப் ஆர்டரும் மடமடவென விழுந்தது. முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே வாட்ஸன் அவுட். 2019 ஐ.பி.எல்.-லில் வாட்சனின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. இரண்டாவது ஓவரில் 4 ரன்களுக்கு ரெய்னா ரன் அவுட். நான்காவது ஓவரில் டுப்ளெஸ்ஸி அவுட், 6வது ஓவரில் கேதர் ஜாதவ் அவுட் என பவர் ப்ளேவுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது சென்னை. பவர் ப்ளேவின் முடிவில் சென்னையின் ஸ்கோர் 24/4.

தோனி #RRvCSK

ராயுடுவும் - தோனியும் எந்த அவசரமும் காட்டாமல் மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி நிதானமாக ஆடினார்கள். 10 ஓவர்களின் முடிவில்தான் சென்னையின் ஸ்கோர் 50 ரன்களைத் தொட்டது. இதனால் அடுத்த 60 பந்துகளில் 102 ரன்கள் சேர்க்கவேண்டும் என ரன்ரேட் எகிறியது. அதுவரை ஓவருக்கு 5-8 ரன்கள் அடித்துக்கொண்டிருந்த தோனி- ராயுடு கொஞ்சம் கொஞ்சமாக கியரை டாப் கியருக்கு மாற்றினார்கள். இதனால் ஒவ்வொரு ஓவரும் 10 ரன்களுக்கு மேல் தாண்டியது. இதனால் 15 ஓவர்களில் முடிவில் 101 ரன்களை அதாவது 30 பந்துகளில் 51 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். 

கடைசி 3 ஓவர்களில், 18 பந்துகளில் 39 ரன்கள் அடிக்கவேண்டும் என மேட்ச், த்ரில்லிங் மோடுக்குத் தாவியது. ஆனால் ஸ்டோக்ஸின் 18-வது ஓவரில் ராயுடு அவுட். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கிடைக்க, கடைசி 12 பந்துகளில் 30 ரன்கள் என சேஸிங் டார்கெட் எகிறியது. 19-வது ஓவரை ஆர்ச்சர் மிகச்சிறப்பாக வீசினார். பௌண்டரிகள் அடிக்க முயன்ற தோனியால் அது முடியவில்லை. அதனால் இரண்டு இரண்டு ரன்களாக சேர்த்து, ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கி கீழேவிழுந்தார் தோனி. சில நிமிட ஓய்வுக்குப் பிறகு மீண்டவர் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 

தோனி

கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வந்தார். முதல் பந்தில் ஜடேஜா கீழே விழுந்தாலும் பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பால் நோ பால். ஒரு ரன் அடித்துவிட்டு ஓடினார் ஜடேஜா. ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் தோனி. ஃப்ரீ ஹிட்டில் இரண்டு ரன்கள் அடித்தார் தோனி. 4 பந்துகளில் 8 ரன்கள் அடிக்க வேண்டும். தோனி க்ளீன் போல்டு. 43 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்தார் தோனி. இதில் 32 ரன்கள் ஓடி ஓடி எடுத்தது. சான்ட்னர் க்ரீஸுக்கு வந்தார். ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வரை அதை 2 ரன்களுக்கு அடித்துவிட்டு ஓடினார் சான்ட்னர். இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்த பந்தை முதலில் `நோ பால்’ காட்டிய அம்பயர், லெக் அம்பயரை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டு `நோ பால்’ இல்லை என்று மறுத்துவிட்டார். இதனால் Dugout-ல் இருந்த தோனி கடுப்பானார். கைகளை உயர்த்தி `நோ பால்’ எனச் சத்தம் போட்டவர் ஒரு கட்டத்தில் மைதானத்துக்குள் வந்தார்.

இரண்டு அம்பயர்களுடனும் வாக்குவாதம் செய்தார். நோ பால் காட்டிய அம்பயரை கைகளை நீட்டி பேசிக்கொண்டிருந்தார் தோனி. ஆனால், நோ பாலாக அது அறிவிக்கப்படவில்லை. இதனால் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என ஆட்டம் மாறியது. அடுத்த பந்தில் 2 ரன்கள் அடித்தார் சான்ட்னர். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை. ஆனால், அடுத்த பந்தை வைடாக வீசினார் ஸ்டோக்ஸ். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என ஆட்டம் பரபரப்பின் உச்சத்தைத்தொட்டது. இரண்டு ரன்கள் அடித்தால் ஆட்டம் டை-யாகும், சூப்பர் ஓவருக்குப் போகும் என விறுவிறுப்பு கூடியது. ஆனால், கடைசி பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சான்ட்னர். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது. தோனி மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார்.

தோனி

7 போட்டிகளை விளையாடி முடித்திருக்கும் சென்னை 12 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 6 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் நான்காவது இடத்தில் இருக்கிறது. இரண்டாம் கட்டத்தை நோக்கி வேகவேகமாக நகர்கிறது ஐபிஎல் 2019.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்