3 மாற்றங்களுடன் களமிறங்கும் கொல்கத்தா! - ஃபீல்டிங் தேர்வுசெய்த டெல்லி #KKRvDC | IPL 2019: DC won the toss and elected to field first

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (12/04/2019)

கடைசி தொடர்பு:20:05 (12/04/2019)

3 மாற்றங்களுடன் களமிறங்கும் கொல்கத்தா! - ஃபீல்டிங் தேர்வுசெய்த டெல்லி #KKRvDC

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

டெல்லி அணி வீரர்கள்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 26-வது லீக் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். 

டெல்லி அணி பிளேயிங் லெவன்

இந்தப் போட்டியில், கொல்கத்தா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கிறிஸ் லின், ஹேரி கர்னி மற்றும் சுனில் நரேன் ஆகியோருக்குப் பதிலாக, ஜோ டென்லி, கார்லோஸ் பிராத்வொயிட் மற்றும் பெர்குசன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றமாக, லாமிசேனேவுக்குப் பதிலாக கீமோ பவுல் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கொல்கத்தா பிளேயிங் லெவன்

நடப்பு ஐபிஎல் தொடரில், இரு அணிகளுக்குமே இது 7-வது போட்டியாகும். இதில், 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்திருக்கிறது. அதேபோல, 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.