கடுமையான சூழ்நிலைகளில் சிறப்பாக ஆட வேண்டும் - டாஸ் வென்ற ரஹானே பந்துவீச்சு தேர்வு |  we need to play well in the crunch situations - rahane

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (13/04/2019)

கடைசி தொடர்பு:16:16 (13/04/2019)

 கடுமையான சூழ்நிலைகளில் சிறப்பாக ஆட வேண்டும் - டாஸ் வென்ற ரஹானே பந்துவீச்சு தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ரஹானே

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்  ஐபிஎல் தொடரின் 27-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் காயம்காரணமாக பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை அவருக்குப் பதிலாக லிவ்விங் ஸ்டோன், ரியான் பிராய் பதிலாக கெளதம் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் ஷர்மா அணிக்குத் திரும்பியுள்ளார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில், இவ்விரு அணிகளுக்குமே இது 7-வது போட்டியாகும். மும்பை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகள்  8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்திருக்கிறது. ராஜஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில், 1 வெற்றி, 5 தோல்விகள் 2 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளுமே வெற்றிக்காகக் கடுமையாகப் போராடுவார்கள். 

ராஜஸ்தான் ராயல்ஸ்

டாஸ் வென்ற ரஹானே பேசுகையில், `நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளோம். இந்தப் பிட்ச் எப்படி இருக்கும் என உறுதியாகத் தெரியாது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் கடுமையான சூழ்நிலைகளில் நன்றாக விளையாட வேண்டும். இந்தப் போட்டியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக லிவ்விங் ஸ்டோன், ரியான் பராக்குக்குப் பதிலாகக் கெளதம் விளையாடவுள்ளனர்’ என்றார்.