ஈடர்ன்கார்டனில் 6 ஆண்டுகள் தாகத்தைத் தீர்க்குமா சி.எஸ்.கே?! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு #KKRvCSK | chennai vs kolkata ipl match

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (14/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (14/04/2019)

ஈடர்ன்கார்டனில் 6 ஆண்டுகள் தாகத்தைத் தீர்க்குமா சி.எஸ்.கே?! - டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு #KKRvCSK

நடப்பு ஐபிஎல் தொடரின் 29 -வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

சி.எஸ்.கே தோனி

ஐ.பி.எல் 2019 தொடரின் 29 -வது போட்டியில் கொல்கத்தா அணியுடன் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எளிதில் கட்டுப்படுத்தியது. ஆனால் கொல்கத்தா மைதானம் பேட்டிங்-க்கு சாதகமான மைதானம் என்பதால், நிச்சயம் ஹை-ஸ்கோர் மேட்ச் தான். 

சென்னை அணியைப் பொறுத்தவரை அனுபவ அணி என்பதுதான் பலம். பேட்டிங்கில் இந்தத் தொடரில் தோனி மட்டுமே நம்பிக்கை தரும்படியாக விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ரெய்னா இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பாதி சீசன் முடிந்த நிலையில் ரெய்னாவுக்கு இது மோசமான தொடக்கம்தான். இன்று பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சென்னை பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். 

சி.எஸ்.கே. பிளேயிங் லெவன்

கொல்கத்தா அணியின் பலம் ரஸல் தான். இறுதிக் கட்டத்தில் அவரைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்றுதான். தொடர்ந்து சென்னை அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக்கூடியவரும் கூட. லின், நரைன், உத்தப்பா, ராணா, தினேஷ் கார்த்திக், ரஸல், இளம் வீரர் சுப்மான் கில் என அவர்களது பேட்டிங் படையைச் சென்னை அணி சமாளித்துவிட்டால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும். 

கொல்கத்தா பிளேயிங் லெவன்

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில்  எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கிறிஸ் லின், சுனில் நரேன் மற்றும் குர்னி ஆகியோர் இன்றைய போட்டியில் களம்காண்கின்றனர். கொல்கத்தா ஈடர்ன்கார்டன் மைதானத்தில் சென்னை அணி வெற்றி சதவிகிதம் 50க்கும் கீழ். தவிர சென்னை அணி, ஈடர்ன்கார்டன் மைதானத்தில் கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றது. அதன்பிறகு அந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் ஒன்றில் கூட சென்னை அணி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.