`நீதி வென்றது!’ - உலகக்கோப்பை அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து உத்தப்பா | ``Justice has been done" uttappa on DK selection on WC squad

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (16/04/2019)

கடைசி தொடர்பு:13:13 (16/04/2019)

`நீதி வென்றது!’ - உலகக்கோப்பை அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து உத்தப்பா

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும்  மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் மோதவுள்ளன. 

உலகக்கோப்பை இந்திய அணி

தற்போது ஒவ்வொரு நாடும் தங்களின் அணியை அறிவித்து வருகின்றன. நேற்றைய தினம் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் மீண்டும் விளையாட உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி இருந்து வந்தது. இறுதியில் தினேஷ் கார்த்திக் முந்தினார். உலகக்கோப்பை அணியில் அவர் இடம் பிடித்தார். 

இது தொடர்பாகப் பேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்,  ``தேர்வுக் குழு கூட்டத்தில் தோனிக்கு காயம் ஏற்பட்டால்தான் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கு பெரும்பாலும் வாய்ப்பு கிட்டும். அப்படி என்றால் தோனி இல்லாத நேரத்தில் நிலையான ஆட்டத்தைக் கணித்து ஆடும் அனுபவ வீரர் தேவை. மேலும், கீப்பிங் திறனும் முக்கியம். இது தொடர்பான விவாதங்களில் அவர் தேர்வு செய்யப்பட்டார்” என்றார். 

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா, தனது கேப்டன் (கொல்கத்தா அணி) உலகக்கோப்பை அணிக்குத் தேர்வானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில் அவர்,  ``தனது செயல்பாடுகள் மூலம் உலகக்கோப்பை அணியில் இருப்பதற்குத் தகுதியான ஒரு வீரர் தினேஷ் கார்த்திக். நீதி வென்றது. கடந்த 2 ஆண்டுகளின் இந்திய அணியில் இருக்கும் சிறந்த ஃபினிஷர் அவர்” என கூறியுள்ளார். 

உத்தப்பா

உலகக்கோப்பை அணிக்குத் தேர்வானது தொடர்பாக நேற்று பேசிய தினேஷ் கார்த்திக்,  ``இந்தத் தகவல் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது நீண்ட காலக் கனவு. ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். மீண்டும் சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.