90 நிமிடம் நடந்த செலெக்‌ஷன்! ரிசப் பன்ட் விவகாரத்தில் என்ன நடந்தது? | Did indian cricket team selectors make a blunder by ignoring Rishabh Pant?

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:05 (16/04/2019)

90 நிமிடம் நடந்த செலெக்‌ஷன்! ரிசப் பன்ட் விவகாரத்தில் என்ன நடந்தது?

லகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பர்கள் என்ற வரிசையில் தோனியும், தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக் இடத்தில் ரிசப் பன்ட்  எதிர்பார்க்கப்பட்டார். மாறாக, ரிசப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது, 21 வயதே நிரம்பிய இளம் வீரர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் புகைச்சல் எழுந்துள்ளது. ரிசப் பன்ட் தேர்வாகாததற்கான காரணங்களும் வெளியே கசியத் தொடங்கியுள்ளது. வீரர்களின் தேர்வு 90 நிமிடம் நடந்தது. அதில், முதல் பகுதி கூட்டம் முழுவதும் ரிசப் பன்ட் பற்றியே பேசியிருக்கிறார்கள்.  இந்திய அணியின் சீனியர் மெம்பர்களின் ஆதரவும் ரிசப் பன்டுக்குத்தான் இருந்துள்ளது. 

ரிசப் பன்ட்

ரிசப் பன்டை 4-வது வீரராகக் களம் இறக்கலாம். லோயர் மிடில் ஆர்டரில் ஆக்ரோஷமான அவரின் ஆட்டம் பலன் அளிக்கும் என்கிற  மூத்த வீரர்கள் கருத்து எடுபடவில்லை. ஓப்பனராக ரிசப் பன்டை களம் இறக்கவும் விவாதம் நடந்தது. ஷிகர் தவான் காயமடைந்தாலோ, பார்ம்  அவுட்  ஆனாலோ,  அவரின் இடத்தில் ரிசப் பன்டை  இறக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தோனி அணியில் இருந்தாலும்  பேட்ஸ்மேன் என்ற வகையில் ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

ரிசப் பன்ட் திறமை மிகுந்தவராக இருந்த போதிலும் வயதும் ஃப்ரெஷ்ஷரை எதிர்கொள்ள அவர் இன்னும் தயாராக வேண்டும் என்ற குறைபாடும்  கீப்பிங் திறமையில் ரிசப் பன்டை விட தினேஷ் கார்த்திக் பெட்டர் என்ற வகையில் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  ரிசப் பன்ட்,  இந்திய கிரிக்கெட்டின் நாளைய நட்சத்திரம். ஆனால், மற்ற வீரர்கள் காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ட்விட்டரில் கருத்து உலவுகிறது. 

தினேஷ் கார்த்திக் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில்  91 ஆட்டங்களில் விளையாடி 1, 738 ரன்களை எடுத்துள்ளார்.  கே.எல். ராகுலுக்கு 2018- ம் ஆண்டு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை.  விஜய் சங்கர் ரிசப் பன்டைவிட 4  ஒரு நாள் ஆட்டங்கள் அதிகமாக விளையாடியுள்ளார். இந்திய அணியின் 4- வது  இடத்தை இவர்களால் பூர்த்திசெய்ய முடியுமா என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

ட்விட்டர்

 

2011- ம் ஆண்டு, விராட் கோலிக்கு 21 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதைய இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்கார் விராட் கோலி மீது நம்பிக்கை வைத்து அணிக்குத் தேர்வுசெய்தார். உலகக்கோப்பையை வென்ற அணியின் விராட் கோலி இடம்பிடித்து சாதனை படைத்தார். சமீபத்தில்,பிசிசிஐ , ரிசப் பன்டை கிரேட் ஏ வீரராக பட்டியலிட்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக  உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது, இளம் வீரர் ஒருவரும் இழைக்கப்பட்ட அநீதி என்று பன்டுக்கு ஆதரவான கருத்தும் எழுந்துள்ளது. 

வீரர்கள் தேர்வில் அரசியல் நடந்திருப்பதாகவும், வெளியில் இருந்து யாரோ அழுத்தம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.  சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டவர்கள், ரிசப் பன்ட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்  இருப்பது  அணிக்கு வலு சேர்க்கும் என்கிற கருத்தைக்கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய முன்னாள்  கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒருபடி மேலே போய், இந்திய அணி 4-வது இடத்தில் பன்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று  தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க