`ஒருத்தரை இழக்க நேரிடலாம், ஆனால் எந்தநேரத்திலும் அழைக்கப்படலாம்!'- ரவிசாஸ்திரி சொல்லும் காரணம் | I don't get involved in selection. If we have any opinion, we let the captain known says Ravi Shastri

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (18/04/2019)

கடைசி தொடர்பு:11:55 (18/04/2019)

`ஒருத்தரை இழக்க நேரிடலாம், ஆனால் எந்தநேரத்திலும் அழைக்கப்படலாம்!'- ரவிசாஸ்திரி சொல்லும் காரணம்

``எந்த ஒரு பிளேயரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை'' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

ரவி சாஸ்திரி

உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 40 நாள்களே உள்ளன. இதில் பங்கேற்கும் அணிகள் ஒவ்வொன்றும் வீரர்கள் பெயரை அறிவித்து வருகின்றன. இதில் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டது. வேர்ல்ட் கப் ரேஸில் இருந்த ரிசப் பன்ட், அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்குத் தேர்வாகவில்லை. மாறாக தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பிடித்தனர். இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. முன்னாள் வீரர்கள் பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகக்கோப்பை இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

ரவி சாஸ்திரி

அதில், ``வீரர்கள் தேர்வில் நான் பங்கேற்கவில்லை. அணித் தேர்வு குறித்து எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கருத்துகள் இருந்தால் அதை கேப்டனிடம் கொண்டு செல்வோம். என்னைக் கேட்டால் 16 வீரர்களைத் தேர்வு செய்திருக்கலாம் என பரிந்துரைப்பேன். உலகக்கோப்பை தொடர் கொஞ்சம் பெரிதானது. அதனால் 16 வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இதை நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தோம். ஆனால், 15 வீரர்களைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. நீங்கள் 15 வீரரைத் தேர்வு செய்யும்போது யாராவது ஒருத்தரை இழக்க நேரிடுவது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று. 

சாஸ்திரி

அணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்கள் வருத்தமடைய வேண்டாம். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. இதில் சிலர் காயமடையலாம். இதனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம்" எனக் கூறியவர், இந்திய அணியில் நான்காவது இடத்தில் யார் இறங்கப் போகிறார்கள் என்பது குறித்தும் பேசினார். ``கடந்த ஐந்து வருடங்களை எடுத்துக்கொண்டால் இந்திய அணி டாப் 3 இடங்களில் இருந்து வருகிறது.

சாஸ்திரி

டெஸ்ட்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. அதனால் எந்த ஒரு பிளேயரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. அணியில் நான்காம் நிலை இடம் என்பது பொறுப்பான இடம். இந்த இடத்தில் விளையாட்டு வீரர் சூழ்நிலைகளை அறிந்து ஆட வேண்டும். எதிரணி, சூழ்நிலைகளை அறிந்து பொறுப்பாக விளையாடக்கூடிய பொசிஷன்தான் நான்காம் நிலை வீரர். முதல் மூன்று இடங்களை விளையாடுபவர்களைக் கணித்து விடலாம். ஆனால், நான்காம் நிலை வீரரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க