அதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு! #KKRvsRCB | Royal Challengers Bangalore scores 213 runs against Kolkata Knight Riders

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (19/04/2019)

கடைசி தொடர்பு:21:56 (19/04/2019)

அதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு! #KKRvsRCB

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 35-வது லீக் போட்டியில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஹென்ரிச் கலாசென் சேர்க்கப்பட்டார். அதேபோல, வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இன்றைய போட்டியில் களம் கண்டார். 

அதன்படி, பெங்களூரு அணிக்கு விராட் கோலி - பார்த்தீவ் படேல் ஜோடி தொடக்கம் தந்தது. இந்த ஜோடி, மூன்று ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 11 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் நரேன், பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு வந்த அக்ஸ்தீப் கைகொடுக்கத் தவறினாலும், கோலியுடன் மொயீன் அலி இணைந்தார். இருவரும் இணைந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அரை சதம் கடந்தனர். கோலியைக் காட்டிலும் மொயீன் அலி விரைவாக ரன்கள் குவிப்பதில் முனைப்புக் காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர், குல்தீப் யாதவ் வீசிய 16 ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தார். பின்னர் அதே ஓவரிலேயே அவுட் ஆனார்.

அவர் 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன்பிறகு, கோலியும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி, ஐபிஎல் தொடரில் தனது 5-வது சதத்தைப் பதிவுசெய்தார். 57 பந்துகளைச் சந்தித்த கோலி 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த கோலி, ஆட்டத்தின் கடைசிப் பந்தில் அவுட் ஆனார். இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் குல்தீப் யாதவ், ரஸ்ஸல், நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க