`நான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து தோனி பாராட்டினார்!' - நெகிழும் ஹர்திக் பாண்ட்யா | Hardik Pandya reveals what MS Dhoni said about his version of helicopter shot

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:09:38 (20/04/2019)

`நான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து தோனி பாராட்டினார்!' - நெகிழும் ஹர்திக் பாண்ட்யா

`ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்து முடித்ததும், தோனியிடம் போய் என்னுடைய ஷாட் எப்படி இருந்தது எனக் கேட்டேன். அவர் என்னை பாராட்டினார்'' என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்ட்யா


ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மும்பை இந்தியன் அணி சார்பில் விளையாடிவரும், ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர், குறைவான பந்துகளை மட்டுமே சந்தித்து, அதிக ரன்களை விளாசி வருகிறார். அவர் ஆடிய 9 போட்டிகளில் 218 ரன்களைச் சேர்த்துள்ளார். பேட்டிங்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 198.64. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 15 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார்.

அதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார். அதேபோல சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அடித்து அசத்தியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ப்ராவோ வீசிய பந்தை மைதானத்தின் மேற்கூரை வரை அடிக்க, தோனி அதைக் கண்டு ரசித்தார். தான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ஹர்திக் பாண்ட்யா, ``நான் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வலைப்பயிற்சியின்போது நான் அதை முயற்சி செய்தேன். நான் தோனி அறைக்குச் சென்று அவரிடம், நான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் எப்படி இருந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர், `சிறப்பாக இருந்தது' எனப் பாராட்டினார்'' என்றார்.


அதிகம் படித்தவை