தோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி! - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK | Ipl match between RCB and CSK

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (21/04/2019)

கடைசி தொடர்பு:21:42 (21/04/2019)

தோனி, பிராவோ பேக்; டிவிலியர்ஸைக் களமிறக்கும் ஆர்.சி.பி! - சேஸிங் முடிவெடுத்த சி.எஸ்.கே #RCBvCSK

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 39வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த போட்டியில் காயம் காரணமாக தோனி களமிறங்காத நிலையில் இன்று விளையாடுகிறார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தோனி அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த டுவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் கரண் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். இதேபோல்  பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் சிராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 7 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் சென்னை அணி முதல் இடத்திலும், இரண்டு வெற்றி, 7 தோல்விகளுடன் பெங்களூரு அணி கடைசி இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் சென்னை முதல் அணியாக இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க