பார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ! - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK | RCB scores 161 runs against CSK

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (21/04/2019)

கடைசி தொடர்பு:07:17 (22/04/2019)

பார்த்திவ் படேல் அரை சதம்; மொயீன் அலியின் லேட் கேமியோ! - சி.எஸ்.கே-வுக்கு 162 ரன்கள் இலக்கு #RCBvCSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

photo credit: @IPL

ஐபிஎல் 39-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிவருகின்றன. கடந்த போட்டியில், காயம் காரணமாக தோனி களமிறங்காத நிலையில் இன்று விளையாடுகிறார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். தோனி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக  டுவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், கரண் ஷர்மா நீக்கப்பட்டார். இதேபோல, பெங்களூரு அணியில் ஏ.பி. டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பினார். சிராஜ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

photo credit: @IPL

அதன்படி பெங்களூரு அணிக்கு வழக்கம்போல பார்த்தீவ் படேல் - விராட் கோலி இணை  தொடக்கம் தந்தது. இந்த ஜோடி, 2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்தது. தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில், தோனியிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி நடையைக்கட்டினார். இதன்பின்னர் டிவில்லியர்ஸ் படேலுடன் கைகோத்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்தக் கூட்டணி, சில ஓவர்கள் மட்டுமே நிலைத்தது. தனது 150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய டிவில்லியர்ஸ், 25 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த பார்த்தீவ் படேல், ஐபிஎல் தொடரில் தனது 13-வது அரை சதத்தைப் பதிவுசெய்தார். ஆனால், அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. அக்ஸ்தீப், ஸ்டோனிஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவர்கள் ஆட்டமிழக்க, 53 ரன்கள் எடுத்த நிலையில் பார்த்தீவ் படேலும் அவுட் ஆனார். வழக்கமாக சீக்கிரமாக இறங்கும் மொயீன் அலி, இன்று 6-வது வீரராகக் களம் கண்டார். இருப்பினும், கடைசி கட்டத்தில்  இவர் அதிரடியாக விளையாடி 26 ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சஹார்ம், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க