16 முறை WWE சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட்! U can't see me! #HBDJohnCena | John cena birthday special story

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (23/04/2019)

கடைசி தொடர்பு:09:28 (30/04/2019)

16 முறை WWE சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட்! U can't see me! #HBDJohnCena

16 முறை WWE சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட்! U can't see me! #HBDJohnCena

காசு கொடுத்து ஒரு ஹாலிவுட் படத்தைத் தியேட்டரில் பார்க்கப்போகும் கூட்டத்தைவிடவும், இந்த அமெரிக்கன் டிவி ஷோவுக்கு ரசிகர்கள் ஏராளம். WWF-ல் ஆரம்பித்து WWE-யாக மாறி ஓடிக்கொண்டிருக்கும் ரெஸ்லிங்கைக் காண, இப்போதும் ஒரு கூட்டம் உண்டு. "ஸ்கூல் படிக்கிறப்ப டிவில பார்த்தேன்.. இப்போ வேலைக்கே வந்துட்டேன். ஆனாலும், ரெஸ்லிங் பார்த்துட்டுதான் இருக்கேன். அதான் யூடியூப் இருக்கே" என்று கண்களில் ஜலம் வைத்துக்கொண்டு நாஸ்டால்ஜியாவை கிளரும் பலரில், ஜான் சீனா ரசிகர்களை மட்டும் அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால், u can't see them...!  ஹாலோ மேன்கூட இன்விசிபிளாக இருப்பார். ஆனால், WWE ரிங் முதல் மீம்ஸ் வரை ஜான் சீனாவை மட்டும் பார்க்கவே முடியாது. 16 முறை WWE  உலக சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட் என WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களின் ஹீரோவுக்கு இன்று பிறந்தநாள். #HBDJohnCena

#HBDJohnCena

கடல் தாண்டி, மலை தாண்டி எக்கச்சக்க ரசிகர்களை அள்ளிக்குவித்திருக்கும் இந்த சாம்பியனுக்கு இன்றோடு 42 வயதாகிறது. ஏப்ரல் 23, 1977-ம் ஆண்டு ஜான் சீனா சீனியர் மற்றும் கரோலுக்கு மகனாகப் பிறந்த ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி சீனா, பிற்காலத்தில் ஜான் சீனாவாக ரெஸ்ட்லிங்கில் என்ட்ரியானார். WWE-ல் ஜான் சீனாவின் 17 ஆண்டுக்கால பயணத்தில், உலக சாம்பியன் மட்டுமன்றி 2 முறை ராயல் ரம்புல் சாம்பியனாகவும், யுனைட்டெட் ஸ்டேட்ஸ், டாக் டீம் சாம்பியன்ஷிப்புகளையும் வென்றுள்ளார். முதல் போட்டியிலேயே, ரெஸ்ட்லிங் உலகின் 'பெரிய கையான' கர்ட் ஆங்கிளை வம்பிழுத்த சீனா, முகத்திலேயே பஞ்ச் ஒன்றைக் கொடுத்துவிட்டு ரிங்கைவிட்டு வெளியேறியதெல்லாம் மாஸ் லெவல்.

#HBDJohnCena

 'Hustle Loyale Respect' என்பதை புரொமோட் செய்த சீனா, என்றைக்குமே 'நல்லவனாகவே' இருப்பார். இவருக்கு எதிரிகள்தான் அதிகம். சீனாவின் டாப் 5 ரைவல்ரியில், இந்த ஐந்து பேரின் பெயர்கள் கட்டாயம் இடம்பிடித்திருக்கும் - ரான்டி ஆர்டன், ஏ.ஜே ஸ்டைல்ஸ், எட்ஜ், பட்டிஸ்டா, சி.எம் பங்க்! ரெஸ்ட்லிங்கின் மாஸ் ஹீரோஸை அசால்ட்டாகவும் நியாயமாகவும் எதிர்கொண்டார் என்பதற்காகத்தான் ஜான் சீனாவுக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்தது.  

WWE-ன் ஃபேஸாக மாறினார் ஜான் சீனா. இந்த ரசிகர் பட்டாளத்தில் குழந்தைகளும் பெண்களுமே அதிகம். சீனாவுக்கு ஃபேன்ஸ் அதிகமோ என்னமோ, சீனாவின் என்ட்ரி மியூசிக்குக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ். நோக்கியா ஃபேஸிக் போனில் டவுன்லோடு செய்து, ரிங்டோனாக வைத்திருந்த காலமெல்லாம் 'சீனேஷன்' காலம். என்ட்ரி மியூசிக் மெல்லமாக ஸ்டார்ட் ஆக, கூட்டம் ஆர்ப்பரிக்க, 'தி டைம் இஸ் நவ்' என பாட்டு ஸ்டார்ட்டாகும்போது, சீனா என்ட்ரி தரும் மொமென்ட்ஸ்... 90s கிட்ஸ்களின்  `கூஸ்பம்ப்ஸ்’ மொமென்ட்ஸ். சுறுசுறுப்பாகத் துறுதுறுவென ரசிகர்களுக்குக் கை கொடுத்து, கட்டியணைத்து மியூசிக் முடிவதற்குள் ரிங்குக்கு ஓடி வந்து சல்யூட் அடிப்பார் ஜான். திங்கள்கிழமை மாலை, 'ரா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண் "இன் தி ரிங்...ஹியர் இட் இஸ் 251 பவுண்ட்ஸ் ஜான்ன்ன்ன்ன்ன்ன் சீ.........னாஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று இன்ட்ரோ கொடுக்கும்போது ஆடியன்ஸின் சத்தம் பட்டையைக் கிளப்பும். ராயல் ரம்பிள், ரெஸ்ட்லமேனியா, ஹெல் இன் அ செல் போன்ற முக்கியமான ரெஸ்ட்லிங் போட்டிகளுக்கு, சீனாவின் என்ட்ரிதான் கடைசி. 

#HBDJohnCena

'Never Give Up' என்பதையே சட்டை, ஷார்ட்ஸ், கேப்பில் எழுதி தனது ரசிகர்களுக்கான மெசேஜாக வைத்திருப்பார். அதனாலயோ என்னமோ, சீனாவின் பேன்ட், ஷார்ட்ஸ், கேப், ஹெட் பேன்ட், இரும்புச் சங்கிலி எல்லாம் செம ஃபேமஸ். அதிலும் ஸ்பெஷல், ரெஸ்ட்லிங் ட்ரம்ப் கார்டு. ஜெயிக்கிறோமோ இல்லையோ, ட்ரம்ப் கார்டு விளையாடும்போது ஜான் சீனாவின் சீட்டு கையில் இருக்க வேண்டும். சாம்பியனின் கார்டை விட்டுக்கொடுக்கக் கூடாது. ரொட்டேட் ஆகும்போது எப்படியாவது வாங்கி வைத்துக்கொண்டு, சீனாவின் கார்டு வெளியே போகாமல் பார்த்துக்கொண்டதெல்லாம் 'பால்வாடி' காலம். ஜான் சீனாவும் அப்படித்தான் இருந்தார், இன்னமும் 'நல்லவராகவே' இருக்கிறார். 2006-ம் ஆண்டு Unforgiven நிகழ்ச்சியில் எட்ஜூடன் மோதல். 2009 பிரேக்கிங் பாயின்டில் ரான்டி ஆர்டனுடன் மோதல், 2011 மனி இன் தி பேங்க் போட்டியில் சி.எம் பங்கை வெளுத்தது எல்லாம் அல்டி- மேட்சுகள்!

#HBDJohnCena

ரெஸ்ட்லிங் மட்டுமல்லாது டிவி ஷோக்கள், ஹாலிவுட்டிலும் என்ட்ரியானார் சீனா. ஆன்- ஸ்க்ரீன் நல்லவர், ஆஃப் - ஸ்க்ரீனில் சமூகப் பணிகள் சார்ந்தும் இயங்கி வருகிறார். எந்த ஒரு ரெஸ்ட்லிங் ஹீரோவுக்கும் இல்லாத ரசிகர் கூட்டம் சீனாவுக்கு உண்டு. "you go cena" எனப் பலமுறை ரசிகர்கள் கோஷமிட்டிருந்தாலும், ஒரேடியாக மொத்த WWE ரசிகர் கூட்டமும் வெறுத்திடாத ஒரே சாம்ப், சீனா! ஹாப்பி ப்ர்த்டே சாம்ப்! 


டிரெண்டிங் @ விகடன்