`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்!' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே? #CSKvSRH | Sunrisers Hyderabad scores 175 runs against chennai super kings

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (23/04/2019)

கடைசி தொடர்பு:07:55 (24/04/2019)

`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்!' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே? #CSKvSRH

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் அணி

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். சென்னை அணியில் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக ஹர்பஜன் சிங் களமிறங்கியுள்ளார். ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வில்லியம்சன் இன்று விளையாடவில்லை. அதேபோல, நதீமுக்குப் பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் பேர்ஸ்டோவை டக் அவுட் செய்தார் ஹர்பஜன். 

சென்னை அணி

அதன்பின்னர், வார்னருடன் மனிஷ் பாண்டே கைகோத்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தியதுடன் ரன் ரேட்டை 9-க்குக் குறையாமல் பார்த்துக்கொண்டனர். அரை சதம் கடந்து, 57 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டம்பிங் செய்யப்பட்டு வார்னர் அவுட் ஆனார். இதனால், ரன் ரேட் குறைய ஆரம்பித்தது. இருப்பினும், மறுமுனையில் இருந்த மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 83 ரன்கள் எடுத்தார். அவரின் உதவியுடன் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சேப்பாக்கத்தில் இந்த சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சென்னை அணியில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க