`கதை பிடித்துவிட்டது!'- பி.டி.உஷா வாழ்க்கை வரலாற்றில் கத்ரீனா கைஃப்? | Katrina Kaif to play athlete PT Usha in biopic

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (24/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (24/04/2019)

`கதை பிடித்துவிட்டது!'- பி.டி.உஷா வாழ்க்கை வரலாற்றில் கத்ரீனா கைஃப்?

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட பி.டி.உஷா இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத நட்சத்திரம். தடகள நாயகியான பி.டி.உஷா, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.  

பி.டி.உஷா
 

முன்னர், இயக்குநர் ரேவதி வர்மா, ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பதாகக் கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். ஆனால், தற்போது பி.டி.உஷா  பயோபிக்கில் கத்ரீனா கைஃப் நடிக்கவிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா அண்மையில் மும்பைக்குச் சென்றிருக்கிறார். கத்ரீனா கைஃபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையைக் கூறியிருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. காத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயொபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க