``கங்குலியிடம் கற்ற வித்தையை உலகக்கோப்பையில காட்டுவேன்!"- தவான் நம்பிக்கை | What I am learning from Ricky Ponting, Sourav Ganguly will use during World Cup

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (25/04/2019)

கடைசி தொடர்பு:12:15 (25/04/2019)

``கங்குலியிடம் கற்ற வித்தையை உலகக்கோப்பையில காட்டுவேன்!"- தவான் நம்பிக்கை

தவான்


இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் இருந்த தவான் இந்த ஐபிஎல் தொடரில் முதலில் தடுமாறினாலும் கடந்த சில போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் தவான் ஃபார்முக்கு திரும்பியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

கங்குலி


டெல்லி அணியின் பயிற்சியாளராக பான்டிங்கும், ஆலோசகராக கங்குலியும் இருந்து வருகிறார்கள். கங்குலி மற்றும் பான்டிங் இருவரும் ஜாம்பவான்கள் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வதாக தவான் கூறியுள்ளார். ``இருவரும் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் பழகும் போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு கேப்டனாக இருவரும் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வரும் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்துவேன்.

இந்தியாவில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். 19 வயதில் ப்ரித்வி ஷா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்திய அணிக்காக அவர் சிறப்பாகச் செயல்படுவார். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. இந்திய அணிக்காக நிறைய சாகசங்களை செய்வார்" என்று பேசியுள்ளார்.