`உலகக் கோப்பை தொடரில் தோனியின் ரோல் முக்கியமானது!' - `ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா அடுக்கும் காரணங்கள் | MS Dhoni has a very important role to play for India at 2019 World Cup says rohit sharma

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (30/04/2019)

கடைசி தொடர்பு:20:41 (30/04/2019)

`உலகக் கோப்பை தொடரில் தோனியின் ரோல் முக்கியமானது!' - `ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா அடுக்கும் காரணங்கள்

தோனி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக்கோப்பை தொடர், விரைவில் தொடங்க உள்ளது.  உலகக்கோப்பை தொடரில், விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ரோஹித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 'தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்' என ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், “ தோனியின் சிந்திக்கும் முறை நமது வீரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அவர், இளைஞர்களைச் சிறப்பாக வழிநடத்துவார். நமது அணியில் சாஹல், குல்தீப் யாதவ் என இரண்டு இளம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். களத்தில் தோனியின் ஆலோசனை இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். விக்கெட் கீப்பிங் செய்துகொண்டே பிட்ச் எப்படி உள்ளது, இந்த மைதானத்தில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்குவார். அவரது அனுபவம், அணிக்கு நீண்ட காலமாக அளித்துவரும் பங்களிப்பு ஆகியவை அளப்பரியது. உலகக்கோப்பையில், அவரது ரோல் மிகவும் முக்கியமானதாகும். அவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் உறுதுணையாக இருப்பார்.  இந்தத் தொடரில், ஒரு துணை கேப்டனாக என்னுடைய பணி என்பது, கேப்டன் விராட்கோலிக்கு உறுதுணையாக இருப்பது.

தோனி, உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருந்தபோது சேவாக், சச்சின் போன்ற சீனியர் வீரகள் இருந்தார்கள். இக்கட்டான சூழலில் அவர்கள் தோனிக்கு வழிகாட்டினார்கள். தற்போது அந்தப் பொறுப்பு எங்களுக்கு வந்துள்ளது. குழப்பமான நேரத்தில் கேப்டனுக்கு உறுதுணையாக இருந்து, அவருக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் பணி''  என்றார்.