உலகக்கோப்பையில் `டார்க் ஹார்ஸஸ்' வெஸ்ட் இண்டீஸ் - ஏன் கணிக்கிறார் கங்குலி? | West Indies are the WC dark horses - Ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (01/05/2019)

கடைசி தொடர்பு:11:42 (01/05/2019)

உலகக்கோப்பையில் `டார்க் ஹார்ஸஸ்' வெஸ்ட் இண்டீஸ் - ஏன் கணிக்கிறார் கங்குலி?

கங்குலி

நடப்பு ஐபிஎல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரஸல், கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி வருகின்றனர். கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரஸல் அந்த அணியின் கேம் சேஞ்ஜராக இருக்கிறார். உலகக்கோப்பை தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடவுள்ளனர். அதிரடி ஆட்டத்தை கடைப்பிடிக்கும் கெய்ல் தற்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடி வருகிறார். ரஸல் களத்திற்கு வந்தாலே பந்துவீச்சாளர்கள் மிரளுகிறார்கள். அந்த அளவுக்கு அதிரடியாக ஆடி வருகிறார்.

 இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களால் `தாதா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசியுள்ளார். ``ஆண்ட்ரூ ரஸல் என்ன ஃபார்மில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக சவால் அளிக்கும். ஆண்ட்ரு ரஸல், சாய் ஹோப், கிறிஸ் கெய்ல், தாமஸ் என நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி  ‘டார்க் ஹார்ஸஸ்’ ஆக இருக்கும். ரஸல் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். அவர் ஒரு கேம் சேஞ்ஜர்” எனக் கூறியுள்ளார்.

ரஸல்

 2017-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஸலுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடையால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவரால் விளையாட முடியவில்லை. தடைக்காலம் முடிந்த பின்னர் காயம் காரணமாக அவரால் அணியில் இணைய முடியவில்லை. 2015-க்குப் பிறகு ஒரே ஒரு ஒருநாள் போட்டியில்தான் ரஸல் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக.ஐபிஎல் தொடரில் எப்படி அதிரடியில் மிரட்டுகிறேனோ அதேபோல் உலகக்கோப்பையிலும்  ஆடுவேன் என ரஸல் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.