`என்னைத் தாண்டி போயிடுவியா?' - ரெய்னாவை ஜாலியாகச் சீண்டும் பண்ட் #ViralVideo #CSKvDC | pant trying to stop raina jolly video

வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (01/05/2019)

கடைசி தொடர்பு:07:50 (02/05/2019)

`என்னைத் தாண்டி போயிடுவியா?' - ரெய்னாவை ஜாலியாகச் சீண்டும் பண்ட் #ViralVideo #CSKvDC

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னா பேட்டிங்கின்போது நடந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெய்னா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கிடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி, பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி சி.எஸ்.கே பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சால் சி.எஸ்.கே சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. வாட்சன் வெளியேற, ரெய்னா களத்துக்கு வந்தார். அவர் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, விக்கெட் கீப்பர் பண்ட், ரெய்னாவுக்கு வழிவிடாமல் ஜாலியாக தடுத்து நிறுத்தினார். பின்னர் ரெய்னாவும் அவரைத் தள்ளிவிடுகிறார். இது காண்போரை கவரும் வகையில் அமைந்தது. ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.