முரளி விஜய், சான்ட்னர், ஷோரே... மாற்றங்களுடன் வருகிறாரா தோனி?! #CSKvMI | Murali Vijay, Santner, Shorey... Is This Chennai's Playing Eleven?!

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (07/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (07/05/2019)

முரளி விஜய், சான்ட்னர், ஷோரே... மாற்றங்களுடன் வருகிறாரா தோனி?! #CSKvMI

மூன்று முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். 5 போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகியிருக்கிறார் என வாட்ஸனின் ஃபார்ம் மிக மிக மோசமாக இருக்கிறது. அதனால் இன்றைய குவாலிஃபையரில் வாட்ஸனுக்கு பதிலாக முரளி விஜய் களமிறக்கப்படுவார்

முரளி விஜய், சான்ட்னர், ஷோரே... மாற்றங்களுடன் வருகிறாரா தோனி?! #CSKvMI

ஐ.பி.எல்-ன் `எல் கிளாசிகோ’ என அழைக்கப்படும் சென்னை வெர்ஸஸ் மும்பை அணிகளின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. தோனி வெர்ஸஸ் ரோஹித் ஷர்மா கேப்டன்ஸி. சேப்பாக்கம் மைதானத்துக்குள் வந்து மற்ற அணிகள் அவ்வளவு எளிதாகச் சென்னையைத் தோற்கடித்துவிடமுடியாது என்று கெத்தாகச் சொல்லலாம்தான். ஆனால், மும்பைக்கு எதிராக அப்படிச் சொல்லமுடியாது என்பதே உண்மை. தொடர்ந்து இரண்டு முறை சேப்பாக்கத்தில் சென்னை அணியைத் தோற்கடித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அதுமட்டுமல்ல இந்த சீஸனில் இரண்டு முறையும் சென்னையைத் தோற்கடித்திருக்கிறது மும்பை. இதில் சென்னையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் அதாவது 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது சென்னை. 

தோனி

சென்னையின் ப்ளேயிங் லெவன்?

தோனி, குவாலிஃபையரில் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடவேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸின் இன்றைய ப்ளேயிங் லெவனில் மூன்று முக்கிய மாற்றங்கள் இருக்கும். இந்த சீஸனில் 14 போட்டிகளிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கியிருக்கிறார் ஷேன் வாட்ஸன். இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அரை சதம் கடந்து 96 ரன்கள் அடித்தார். இதற்கு அடுத்தபடியாக இவரது அதிகபட்ச ஸ்கோர் இந்த சீசனில் 44 ரன்கள் மட்டுமே. மூன்று முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். 5 போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டில் அவுட் என வாட்ஸனின் ஃபார்ம் மிக மிக மோசமாக இருக்கிறது. அதனால் இன்றைய குவாலிஃபையரில் வாட்ஸனுக்கு பதிலாக முரளி விஜய் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். இந்த சீஸனில் முரளி விஜய் விளையாடியிருக்கும் ஒரே போட்டி சென்னையில் மும்பைக்கு எதிரானதுதான். இதில் 35 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார் முரளி விஜய். தமிழக வீரர் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைகளை உணர்ந்து ஆடுவார் என்பதால் முரளி விஜய்யை இன்றைய ப்ளேயிங் லெவனில் எதிர்பார்க்கலாம். 

தோனி

மும்பைக்கு எதிரான சென்னை லீக் போட்டியில் ரோஹிஷ் ஷர்மா, லூயிஸ் என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாகப் பந்து வீசியவர் சான்ட்னர். அதனால் இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சான்ட்னர் களமிறக்கப்படுவார். இவரது இடது கை சுழல்பந்து வீச்சு சென்னைக்குப் பெரும்பலமாக இருக்கும். 

டுப்பெளஸ்ஸி, பிராவோ, சான்ட்னர், தாஹிர் என வெளிநாட்டு வீரர்களின் கோட்டா நிறைவடையும். காயம் அடைந்திருக்கும் கேதர் ஜாதவுக்கு பதிலாக டெல்லி பேட்ஸ்மேன் துருவ் ஷோரி இடம்பிடிப்பார். 

முரளி+ டுப்ளெஸ்ஸி ஓப்பனிங், சுரேஷ் ரெய்னா, ராயுடு, தோனி, ஷோரி, பிராவோ என்பது மிடில் ஆர்டர், சான்ட்னர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் என மூன்று ஸ்பின்னர்ஸ், தீபக் சாஹர் எனும் வேகப்பந்து வீச்சாளர் என்பதுதான் சென்னையின் இன்றைய ப்ளேயிங் லெவனாக இருக்கும்.

தோனி

மும்பை இந்தியன்ஸ் மாற்றங்கள்!

மும்பை, கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாடிய அதே அணியுடன்தான் கிட்டத்தட்ட இன்றைய போட்டியில் விளையாடும். ஒரேஒரு மாற்றமாகச் சென்னை பிட்ச்சுக்காக அனுக்குல் ராய் எனும் ஸ்பின்னர் இடம்பிடிக்கலாம். மெக்லீனகன் வெளியேற்றப்படுவார். குவின்ட்டன் டி காக், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பொலார்ட், அனுக்குல் ராய், ராகுல் சஹார், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா என்பதுதான் மும்பை இந்தியன்ஸின் இன்றைய ப்ளேயிங் லெவனாக இருக்கும். 

பிட்ச்!

வழக்கம்போல சென்னை மைதானம் இன்றும் ஸ்பின்னுக்குச் சாதகமான மைதானமாகவே இருக்கும். 150-160 ரன்கள் என்பதே சேஸிங்கிற்கு நல்ல ஸ்கோராக இருக்கும். டாஸ் வென்றால் இரு அணியின் கேப்டன்களுமே முதலில் பெளலிங்கைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்