`தோனி, கோலி, பாண்ட்யா..இங்கிலாந்து கண்டிஷன்!' - உலகக் கோப்பையும் கபில்தேவ் கணிப்பும் #CWC19 | India has a great combination of youth and experience says kapil dev

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:20 (09/05/2019)

`தோனி, கோலி, பாண்ட்யா..இங்கிலாந்து கண்டிஷன்!' - உலகக் கோப்பையும் கபில்தேவ் கணிப்பும் #CWC19

கபில்தேவ்

உலகக்கோப்பை என்ற கீரிடத்தை முதன்முதலில் இந்தியாவுக்காகப் பெற்றுத்தந்தவர் கபில் தேவ். ஒரு ஆல்ரவுண்டராக 1983 உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தினார் கபில். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. உலகக்கோப்பை தொடரின்போது இங்கிலாந்து நாளிதழ்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த இந்திய அணி, கோப்பை வென்று பதிலடி கொடுத்தது. இந்தமுறை இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போட்டிகள் நடைபெறுகிறது. 

உலகக்கோப்பை குறித்து கபில் தேவ் பேசுகையில்,  ``உலகக்கோப்பை தொடருக்குச் செல்லும் இந்திய அணி இளம்வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. மற்ற அணிகளைவிட மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்கள், கோலி மற்றும் தோனி ஆகியோர் உள்ளனர். நாம் அற்புதமான நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளோம்.

இங்கிலாந்து கண்டிஷன் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும். முகமது ஷமி மற்றும் பும்ரா இருவரும் 145 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும். ஹர்திக் பாண்ட்யா திறமையான வீரர். அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள். அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட விடுங்கள். எந்த வீரரையும் யாருடனும் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு எனத் தனித் திறமை உள்ளது. இந்தியா கண்டிப்பாக டாப்- 4 இடங்களுக்குள் வந்துவிடும். அரையிறுதிப்போட்டியில் அணியின் திறமையும், அதிர்ஷ்டமும் அவர்களை முன்னோக்கி அழைத்துச்செல்லும். தோனி மற்றும் கோலி இருவரும் இந்தியாவுக்குச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்கள் இருவரைப் பிரித்துப்பார்க்கமுடியாது” எனக் கூறினார்.