வார்னர் ‘சீட்ஸ்’ - ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்! | England's Barmy Army Trolls David Warner 

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (10/05/2019)

கடைசி தொடர்பு:12:33 (10/05/2019)

வார்னர் ‘சீட்ஸ்’ - ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுக்கும் இங்கிலாந்து ரசிகர்கள்!

வார்னர்

கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி, இதுவரை ஒருமுறைகூட உலகக் கோப்பையை வென்றதில்லை. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடரையே இரு நாட்டு ரசிகர்களும் மிகத் தீவிரமாகப் பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில்தான், இம்முறை  இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போட்டிகள் நடைபெறுகின்றன. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா வீரர்கள் கால் வைப்பதற்கு முன்பே இங்கிலாந்து ரசிகர்கள் அவர்களை ட்வீட் மூலம் சீண்டியுள்ளனர். England's Barmy Army என்ற க்ரூப், இங்கிலாந்து கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள். இங்கிலாந்து அணியை நிழல் போல் தொடர்வதுதான் இவர்களின் பணி. இந்த நிலையில், தங்களது ட்விட்டர் பக்கத்தில்  ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரின் போட்டோ ஷாப் படங்களைப் பதிவிட்டு வம்புக்கு இழுத்துள்ளனர்.  

இங்கிலாந்து ரசிகர்கள்


பால் டெம்பரிங் புகாரில் கடந்த ஆண்டு சிக்கிய ஆஸ்திரேலியா வீரர்கள், ஸ்டீவன் ஸ்மித், பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோருக்கு  சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து இவர்கள் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்பியுள்ளனர். உலகக் கோப்பை ஸ்குவார்டிலும் ஸ்மித், வார்னர் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  England's Barmy Army தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை டேக் செய்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களின் புகைப்படங்கள் என வார்னர், நாதன் லயன் ஆகியோர் போட்டோ ஷாப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியா டி- ஷர்ட்டில் இருக்கும் வார்னரின் புகைப்படத்தில் Cheats என்று எழுதியுள்ளார். அதேபோல நாதன் லயன், பான்கிராப்ட் கைகளில் சால்ட் பேப்பரை வைத்திருப்பதுபோல போட்டோ ஷாப் செய்துள்ளனர்.  உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பரபரப்பை பற்றவைத்துவிட்டனர்  இங்கிலாந்து ரசிகர்கள்.